பாகிஸ்தானில் பெய்த பலத்த மழை, வெள்ளத்துக்கு 17 பேர் பலி


பாகிஸ்தானில் பெய்த பலத்த மழை, வெள்ளத்துக்கு 17 பேர் பலி
x
தினத்தந்தி 7 March 2020 9:13 PM GMT (Updated: 7 March 2020 9:13 PM GMT)

பாகிஸ்தானில் பெய்த பலத்த மழை, வெள்ளத்துக்கு 17 பேர் பலியாகி உள்ளனர்.


* ஆப்கானிஸ்தானில் பால்க் மாகாணத்தில் பதுங்கியிருந்த தலீபான்களை குறிவைத்து நேற்று முன்தினம் போர் விமானங்கள் குண்டுவீச்சு நடத்தின. இதில் 8 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

* பாகிஸ்தானில் பெய்த பலத்த மழை, வெள்ளத்துக்கு 17 பேர் பலியாகி உள்ளனர். அதிகபட்சமாக கைபர் பக்துங்வா மாகாணத்தில் மட்டும் 12 பேர் பலியாகி உள்ளனர்.

* நியூயார்க் நகரில் ஐ.நா. சபை பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ்சை அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ சந்தித்து பேசினார். ஆப்கானிஸ்தான், சிரியா, ஏமன் உள்ளிட்ட பல நாட்டு விவகாரங்களை அவர்கள் விவாதித்ததாக தகவல்கள் கூறுகின்றன.

* ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் சிரியா அதிபர் பஷார் அல் ஆசாத் நேற்று முன்தினம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது இத்லிப் மாகாணத்தில் அதிபர் ஆதரவு படையின் முன்னேற்றம் தொடர்பாக இருவரும் விவாதித்தனர்.

* ஐரோப்பிய நாடுகளுடன் அகதிகள் விவகாரத்தில் சிக்கல் எழுந்துள்ள நிலையில், துருக்கி அதிபர் எர்டோகன் ஒரு நாள் பயணமாக நாளை பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸ் செல்கிறார்.

Next Story