ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட பயங்கர பனிச்சரிவு: போலீஸ் அதிகாரி உள்பட 6 பேர் பலி


ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட பயங்கர பனிச்சரிவு: போலீஸ் அதிகாரி உள்பட 6 பேர் பலி
x
தினத்தந்தி 9 March 2020 10:11 PM GMT (Updated: 9 March 2020 10:13 PM GMT)

ஆஸ்திரேலியாவின் ஏற்பட்ட பயங்கர பனிச்சரிவில் சிக்கி ஒரு போலீஸ் அதிகாரி உள்பட 6 பேர் பலியாகினர்.


* வெனிசூலா தலைநகர் கராகசில் வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த கிடங்கில் ஏற்பட்ட தீவிபத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்கு எந்திரங்களும், 600 கம்ப்யூட்டர்களும் எரிந்து நாசமானதாக அந்த நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனால் அங்கு இந்த ஆண்டு திட்டமிட்டப்படி நாடாளுமன்ற தேர்தலை நடத்துவதில் சிக்கல் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

* ஆஸ்திரேலியாவின் டச்ஸ்டீன் பிராந்தியத்தில் 2 வெவ்வேறு இடங்களில் ஏற்பட்ட பயங்கர பனிச்சரிவில் சிக்கி ஒரு போலீஸ் அதிகாரி உள்பட 6 பேர் பலியாகினர்.

* போர்ச்சுக்கல் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள விலா ரியல் நகரில் நடந்த கார் பந்தயத்தின்போது எதிர்பாராதவிதமாக விபத்து நேரிட்டது. இதில் கார் பந்தய வீரர் ஒருவர் உள்பட 2 பேர் பலியாகினர். 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

* பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாகாணத்தில் இடைவிடாது கொட்டித்தீர்த்த கனமழையால் அங்குள்ள பல்வேறு நகரங்களில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. வெள்ளத்தில் சிக்கி இதுவரை 27 பேர் பலியானதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Next Story