கொரோனா வைரசின் பிறப்பிடமான உகான் சென்றார் சீன அதிபர் ஜி ஜின்பிங்


கொரோனா வைரசின் பிறப்பிடமான உகான் சென்றார் சீன அதிபர் ஜி ஜின்பிங்
x
தினத்தந்தி 10 March 2020 4:03 AM GMT (Updated: 10 March 2020 6:58 AM GMT)

கொரோனா வைரசின் பிறப்பிடமான உகான் மாகாணத்திற்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் சென்றுள்ளார்.

பெய்ஜிங்,

உலக நாடுகளை கொரோனா வைரஸ் உலுக்கி வருகிறது.  சுமார் 100 நாடுகளில் வேகமாக பரவி வரும் இந்த வைரஸ் நாள்தோறும் புதிய நோயாளிகளை அதிக எண்ணிக்கையில் உருவாக்கி வருகிறது.  உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலியானோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது.  

சீனாவின் உகான் மாகாணத்தில் இருந்து தான் முதல் முறையாக  கடந்த டிசம்பர் மாதம்  இந்த வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. சீனாவில் மட்டும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு  3,136 பேர் பலியாகியுள்ளனர். சுமார் 80,753 -பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்த நிலையில், கொரோனா வைரசின் பிறப்பிடமான உகான் மாகாணத்திற்கு, சீன அதிபர் ஜி ஜின்பிங் சென்றிருப்பதாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. உகானில் கொரோனா வைரஸ் பரவிய பின்பு, சீன அதிபர் அங்கு செல்வது இதுதான் முதல் முறையாகும். 

Next Story