உலக செய்திகள்

உருகிய இரும்பு மழை பெய்யும் மிக சூடான கிரகம் கண்டு பிடிப்பு + "||" + 640 light-years from Earth is an ‘ultra-hot giant planet’ where it ‘rains’ iron

உருகிய இரும்பு மழை பெய்யும் மிக சூடான கிரகம் கண்டு பிடிப்பு

உருகிய இரும்பு மழை பெய்யும் மிக சூடான கிரகம் கண்டு பிடிப்பு
பூமியிலிருந்து 640 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உருகிய இரும்பு மழை பெய்யும் மிக சூடான கிரகம் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.
லண்டன்

சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வானியலாளர்கள் விண்மீன் தொகுப்பில் ஒரு  பயங்கர சூடான ராட்சத கிரகம் ஒன்றை  கண்டு பிடித்து உள்ளனர்.  அங்கு  உருகிய  இரும்பு மழை பெய்யலாம்  என்று அவர்கள் சந்தேகிக்கிறார்கள். 

சிலி அட்டகாமா பாலைவனத்தில் உள்ள ஐரோப்பிய தெற்கு ஆய்வகத்தின் (ESO) உயர் தெளிவுத்திறன் நிறமாலை, எஸ்பிரஸ்ஸோவை( ESPRESSO) பயன்படுத்தி வானியலாளர்கள்  இதனை கண்டறிந்து உள்ளனர்.

சூரிய மண்டலத்திற்கு வெளியே மிக தீவிரமான கிரகங்களின் காலநிலையைப் கண்டறிய சிறந்த வழிகளுக்கு வழிவகுக்கும் ஒரு சிறந்த கண்டுபிடிப்பு இதுவாகும்.

வானியலாளர்கள்  தகவல் படி  பூமியில் இருந்து 640 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளது இந்த மாபெரும் எக்ஸோபிளானட் WASP-76b. இதன் வெப்பநிலை 2400 டிகிரி செல்சியஸுக்கு மேல்  இருக்கும். இது உலோகங்களை ஆவியாக்கும் அளவுக்கு உயர்ந்த வெப்பநிலை கொண்டது ஆகும்.

இந்த ‘உருகிய இரும்பு மழை’ கிரகம் எப்போதும் ஒரு முகத்தை - அதன் பகல் பக்கத்தை - அதை உருவாக்கிய நட்சத்திரத்திற்கு மட்டுமே காட்டுகிறது. அதே நேரத்தில் அதன் குளிரான இரவு பக்கமானது நிரந்தர இருளில் உள்ளது பூமியின் சந்திரனைப் போல.

இந்த கிரகம்  பூமி சூரியனிடம் இருந்து பெருவதை விட அதனை உருவாக்கிய நட்சத்திரத்திலிருந்து ஆயிரக்கணக்கான மடங்கு அதிக கதிர்வீச்சைப் பெறுகிறது. இந்த கிரகம் அதன் நட்சத்திரத்திற்கு மிக நெருக்கமாக உள்ளது. இது அந்த நட்சத்திரத்தை சுற்றி வர  43 மணிநேரம் ஆகும்.

இந்த கிரகத்தில் ஒரு பக்கம் மிகவும் சூடாக இருப்பதால் மூலக்கூறுகள் அணுக்களாக பிரிக்கப்படுகின்றன, மேலும் இரும்பு போன்ற உலோகங்கள் வளிமண்டலத்தில் ஆவியாகின்றன.  பகல் மற்றும் இரவு பக்கங்களுக்கிடையேயான  தீவிர வெப்பநிலை வேறுபாடு நிலவுகிறது.  இது இரும்பு நீராவியை தீவிர வெப்பமான பகல் பக்கத்திலிருந்து குளிரான இரவு பக்கத்திற்கு கொண்டு வருகிறது, அங்கு வெப்பநிலை 1500 டிகிரி செல்சியஸ் வரை குறைகிறது  என்று ஆராய்ச்சியாளர்கள் ஆய்வில் தெரிவித்து உள்ளனர்.

சுவிட்சர்லாந்தின் ஜெனீவா பல்கலைக்கழகத்தின்  இணை v  டேவிட் எரென்ரிச் கூறும் போது ஒரு மாபெரும் அதி-சூடான கிரகத்தில் முதல் முறையாக இரசாயன மாறுபாடுகள் கண்டறியப்பட்டு உள்ளது. இருப்பினும், விடியற்காலையில் இந்த இரும்பு நீராவியை நாங்கள் காணவில்லை. இந்த நிகழ்வுக்கு சாத்தியமான ஒரே விளக்கம் என்னவென்றால், இந்த எக்ஸோபிளேனட்டின் இருண்ட பக்கத்தில் இரும்பு மழை பெய்கிறது என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. வினாடியில் 1000 எச்டி திரைப்படங்களை பதிவிறக்கம் செய்யும் இன்டர்நெட் வசதியை உருவாக்கிய ஆராய்ச்சியாளர்கள்
வினாடியில் ஆயிரம் எச்டி திரைப்படங்களை பதிவிறக்கம் செய்யும் வகையில் அதிவேக இன்டர்நெட் வசதியை ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி உள்ளனர்.
2. பூமியை போன்ற ஒரு பெரிய கிரகம் உருவாகி வருவதை வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்
பூமியிலிருந்து 520 ஒளி ஆண்டுகள் தொலைவில் பூமியை போன்ற ஒரு பெரிய கிரகம் உருவாகி வருவதை வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
3. பூமியின் காந்தப்புலம் பலவீனமடைந்து வருகிறது ; செயற்கைகோள்களுக்கு பாதிப்பு
பூமியின் காந்தப்புலம் 10 சதவீதம் பலவீனமடைந்து உள்ளது. இதனால் செயற்கைகோள்களுக்கு பாதிப்பு ஏற்படும் என கூறப்பட்டு உள்ளது.
4. அறிவியல் அதிசயம்: ஆக்சிஜன் இல்லாமல் உயிர்வாழ முடியும்?
பூமியில் ஆக்சிஜனின்றி உயிர்வாழும் புதிய உயிரினத்தை கண்டுபிடித்துள்ளதாக இஸ்ரேல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
5. சூரியனைவிட 1000 மடங்கு பெரிய நட்சத்திரம் பெட்டல்ஜியூஸ் விரைவில் வெடித்து சிதறும்
வானில் மிகவும் பிரகாசமான 12-வது நட்சத்திரம் பெட்டல்ஜியூஸ் விரைவில் வெடித்து சிதறும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.