உலக செய்திகள்

அயர்லாந்து பிரதமருக்கு இந்திய முறையில் வணக்கம் தெரிவித்த டிரம்ப் + "||" + Donald Trump greets Ireland PM Leo Varadkar with namaste, says India ahead of the curve

அயர்லாந்து பிரதமருக்கு இந்திய முறையில் வணக்கம் தெரிவித்த டிரம்ப்

அயர்லாந்து பிரதமருக்கு இந்திய முறையில் வணக்கம் தெரிவித்த டிரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அயர்லாந்து பிரதமருடனான சந்திப்பின் போது, கை குலுக்குவதை தவிர்த்து வணக்கம் போட்டுள்ளார்.
வாஷிங்டன்,

கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க விருந்தினர்களை கண்டால் கை குலுக்கவும், கட்டித்தழுவவும், முத்தமிடவும் வேண்டாம் என உலக நாடுகள், மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து வருகின்றன. இதனால் பல நாடுகளில் மக்களின் கலாசார, உபசரிப்பு பழக்க வழக்கங்கள் மாறி வருகின்றன. சில நாடுகளில் கை குலுக்குவதற்கு பதிலாக கால்களை தட்டியும், முழங்கைகளை இடித்தும் உபசரிக்கின்றனர்.


ஆனால் இதன் மூலமும் நோய் பரவுவதற்கு வாய்ப்பு இருப்பதால் இந்தியர்களின் பாரம்பரிய முறைப்படி இரு கைகளை கூப்பி வணக்கம் தெரிவிக்க வேண்டுமென இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ அண்மையில் கூறியிருந்தார்.

இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், அயர்லாந்து பிரதமர் லியோ வரத்கர் ஆகியோருக்கு இடையேயான சந்திப்பு வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் உள்ள ஒவல் அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது இருவரும் கை குலுக்கி கொள்ளாமல் இந்திய பாரம்பரிய முறையில் வணக்கம் தெரிவித்தனர்.

அதனை தொடர்ந்து பத்திரிகையாளர்களிடம் டிரம்ப் பேசும்போது, “நாங்கள் இன்று கைகுலுக்கவில்லை. நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டிருந்தோம் என்ன செய்யப் போகிறோம் என்று, அது ஒரு வித்தியாசமான உணர்வு. நான் சமீபத்தில்தான் இந்தியாவில் இருந்து வந்தேன். நான் அங்கு யாருக்கும் கை கொடுக்கவில்லை. அது மிகவும் எளிதானது. ஏனென்றால் அவர்கள் இவ்வாறு வணக்கம் தெரிவித்துத்தான் பழகி இருக்கிறார்கள்” என்றார்.

மேலும் அவர் இந்திய சுற்றுப்பயணத்திற்கு பிறகு கை குலுக்‌குவதற்கு பதிலாக கை கூப்பி வணங்குவதை பின்பற்றி வருவதாக தெரிவித்தார். அயர்லாந்து பிரதமர் லியோ வரத்கரரின் தந்தை ஒரு இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. டொனால்டு டிரம்ப் பிரதமர் மோடி இடையே சமீபத்தில் எந்த உரையாடலும் நடைபெறவில்லை -தகவல்கள்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பிரதமர் மோடி இடையே சமீபத்தில் எந்த உரையாடலும் நடைபெறவில்லை என வெளியுறவுத்துறை அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவித்து உள்ளது.
2. மலேரியாவுக்கான மருந்தை டிரம்ப் எடுத்துக் கொள்வதால் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்-நான்சி பெலோசி
பருத்த உடலமைப்பை கொண்ட டொனால்டு டிரம்ப் தற்போது அந்த மருந்தை எடுத்துக் கொள்வதால் அவர் உயிருக்கு சிக்கல் ஏற்படலாம் என சபாநாயகர் நான்சி பெலோசி கூறி உள்ளார்.
3. இந்தியா- அமெரிக்கா நட்பிற்கு அதிக சக்தி உள்ளது -டொனால்டு டிரம்புக்கு பிரதமர் மோடி நன்றி
இந்தியா- அமெரிக்கா நட்பிற்கு அதிக சக்தி உள்ளது என டொனால்டு டிரம்புக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்து உள்ளார்.
4. அமெரிக்க ஜனாதிபதியின் வெள்ளை மாளிகை அதிகாரிகளுக்கு கொரோனா
அமெரிக்க ஜனாதிபதியின் வெள்ளை மாளிகை அதிகாரிகளுக்கு கொரோனா வைரஸ் பாதித்துள்ளது.
5. அமெரிக்க பொருளாதாரத்தை மீண்டும் மீட்டெடுக்க அதிக உயிர் இழப்பு ஏற்படும்- டொனால்டு டிரம்ப்
அமெரிக்க பொருளாதாரத்தை மீண்டும் மீட்டெடுக்க அதிக உயிர் இழப்பு ஏற்படும் என்று ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறினார்.