பிரான்ஸ் நாட்டில் 350 குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை; டாக்டர் சிக்கினார்


பிரான்ஸ் நாட்டில் 350 குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை; டாக்டர் சிக்கினார்
x
தினத்தந்தி 14 March 2020 10:51 PM GMT (Updated: 14 March 2020 10:51 PM GMT)

பிரான்ஸ் நாட்டில் 350 குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர் சிக்கினார்.

பாரீஸ்,

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் டாக்டர் ஜோயல் லீ ஸ்கவுர்னக் (வயது 69).

ஓய்வு பெற்ற மருத்துவ அதிகாரியான இவர் தனது உறவுப்பெண்கள் 2 பேர், பக்கத்து வீட்டுக்காரரின் மகள், ஒரு நோயாளி என 4 பேரை பாலியல் பலாத்காரம் செய்தார் என புகார் எழுந்தது. இது தொடர்பாக அவர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார். அவரது வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, குழந்தைகளை டாக்டர் ஜோயல் பாலியல் தொல்லை செய்தது தொடர்பான படங்கள், அதுபற்றிய விவரங்களை அவர் எழுதி வைத்திருந்த நோட்டு புத்தகம் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர்.

இந்த வழக்கு செயின்டீஸ் நகர கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வக்கீல், “ டாக்டர் ஜோயல் மீது இந்த பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுகள் மட்டுமல்ல; 1989-ம் ஆண்டில் இருந்து 2017-ம் ஆண்டு வரையில் சுமார் 350 குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் என்ற குற்றச்சாட்டும் உள்ளது” என கூறினார்.

விசாரணையின்போது தன் மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் தொல்லை குற்றச்சாட்டுகளை டாக்டர் ஜோயல் ஒப்புக்கொண்டார். அதே நேரத்தில் பலாத்கார குற்றச்சாட்டுகளை அவர் மறுத்தார்.

அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக அங்கிருந்து வருகிற தகவல்கள் கூறுகின்றன.


Next Story