கொரோனா வைரஸ்: சிங்கப்பூர் முருகன் கோவிலில் பங்குனி தேரோட்டம் ரத்து; கோவில் நிர்வாகம் அறிவிப்பு


கொரோனா வைரஸ்: சிங்கப்பூர் முருகன் கோவிலில் பங்குனி தேரோட்டம் ரத்து; கோவில் நிர்வாகம் அறிவிப்பு
x
தினத்தந்தி 15 March 2020 8:18 PM GMT (Updated: 15 March 2020 8:18 PM GMT)

கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக, சிங்கப்பூர் முருகன் கோவிலில் நடைபெற இருந்த பங்குனி தேரோட்ட நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

சிங்கப்பூர்,

சிங்கப்பூர் முருகன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும் இந்த கோவிலில் பங்குனி உத்திர விழாவின்போது வெகுவிமரிசையாக தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி பங்குனி உத்திர விழா நடைபெற உள்ளது. தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் இந்த ஆண்டு பங்குனி உத்திர தேரோட்ட நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.

இதுதொடர்பாக கோவில் நிர்வாக கமிட்டி தலைவர் நாராயணசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சிங்கப்பூர் முருகன் கோவில் பங்குனி உத்திர தேரோட்ட விழாவில் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்பார்கள். தற்போது கொரோனா வைரஸ் பரவி வருவதால் பக்தர்களின் உடல் நலத்தை கருத்தில் கொண்டும் கூட்டம் திரள்வதை தடுக்கும் வகையிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாகவும் இந்த ஆண்டு பங்குனி உத்திர தேரோட்டம் ரத்து செய்யப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story