உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் தலீபான் வெறிச்செயல்: 7 போலீசார் சுட்டுக்கொலை + "||" + Taliban outbreak in Afghanistan: 7 policemen shot dead

ஆப்கானிஸ்தானில் தலீபான் வெறிச்செயல்: 7 போலீசார் சுட்டுக்கொலை

ஆப்கானிஸ்தானில் தலீபான் வெறிச்செயல்: 7 போலீசார் சுட்டுக்கொலை
ஆப்கானிஸ்தானில், தலீபான்களால் 7 போலீசார் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
காபூல்,

ஆப்கானிஸ்தானில் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டுவரும் விதமாக தலீபான் கைதிகள் 5 ஆயிரம் பேரை விடுதலை செய்யும் ஆணையில் அந்த நாட்டு அதிபர் அஷ்ரப் கனி அண்மையில் கையெழுத்திட்டார்.

எனினும் முதற்கட்டமாக 1,500 கைதிகள் மட்டும் விடுவிக்கப்படுவார்கள் என்றும், பேச்சுவார்த்தைக்கு பின்னர் மற்ற 3,500 பேரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.


இதற்கு தலீபான் பயங்கரவாதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் 1,500 கைதிகளை விடுவிப்பதில் ஆப்கானிஸ்தான் அரசு காலம் தாழ்த்தி வருகிறது.

இந்த நிலையில் காந்தஹார் மாகாணம் ஜாரி மாவட்டத்தில் உள்ள போலீஸ் சோதனை சாவடிக்கு நேற்று அதிகாலை போலீஸ் உடையில் வந்த பயங்கரவாதி ஒருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார்.

இதில் போலீஸ்காரர்கள் 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். அதனை தொடர்ந்து, தாக்குதல் நடத்திய பயங்கரவாதி அங்கிருந்து தப்பி ஓடினார்.

இந்த தாக்குதலுக்கு எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில் தலீபான் பயங்கரவாதிகளே தாக்குதலுக்கு காரணம் என மாகாண போலீஸ் செய்தி தொடர்பாளர் ஜாமல் பாரிக்சாய் தெரிவித்துள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. காபூல் குருத்வாரா மீது ஐஎஸ் தாக்குதலில் 27 சீக்கியர்கள் பலி; இந்தியா கடும் கண்டனம்
காபூல் குருத்வார மீது ஐஎஸ் தாக்குதலில் 27 சீக்கியர்கள் பலியானார்கள். தாக்குதலில் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தொடர்பு; தாக்குதலுக்கு இந்தியா கண்டன் தெரித்துள்ளது.
2. ஆப்கானிஸ்தானுக்கான நிதியுதவியில் ரூ.7,600 கோடி குறைப்பு: அமெரிக்கா அதிரடி
ஆப்கானிஸ்தானுக்கு வழக்கப்பட்டு வரும் நிதியுதவியில் ரூ.7,600 கோடி குறைக்கப்படுவதாக அமெரிக்கா அதிரடியாக அறிவித்துள்ளது.
3. ஆப்கானிஸ்தானில் கடும் துப்பாக்கி சண்டை: 3 பயங்கரவாதிகள் உள்பட 7 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் நடந்த துப்பாக்கி சண்டையில், 3 பயங்கரவாதிகள் உள்பட 7 பேர் பலியாகினர்.
4. ஆப்கானிஸ்தானில் 6 தலீபான் பயங்கரவாதிகள் உடல் சிதறி பலி
ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 6 தலீபான் பயங்கரவாதிகள் உடல் சிதறி பலியாயினர்.
5. ஆப்கானிஸ்தானில் ராணுவ முகாமில் நடந்த மோதலில் ராணுவ வீரர்கள் 24 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் ஜாபுல் மாகாணத்தில் உள்ள ராணுவ முகாமில் நடந்த உள்மோதலில் ராணுவ வீரர்கள் 24 பேர் பலியாயினர்.