உலக செய்திகள்

இஸ்ரேல் பிரதமருக்கு கொரோனா பாதிப்பா? + "||" + Will Corona affect Israel's Prime Minister?

இஸ்ரேல் பிரதமருக்கு கொரோனா பாதிப்பா?

இஸ்ரேல் பிரதமருக்கு கொரோனா பாதிப்பா?
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறிய பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
ஜெருசலேம், 

இஸ்ரேலில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் அங்கு இதுவரை 213 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் அந்த நாட்டு அரசு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஏற்கனவே நாடு முழுவதும் பள்ளிக்கூடங்களுக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வணிகவளாகங்கள், சினிமா தியேட்டர்கள் மற்றும் ஓட்டல்களை மூட பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் அவர்களின் உறவினர்களை கொரோனா வைரஸ் தாக்கி வரும் சூழலில் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறிய பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

பரிசோதனையின் முடிவில் அவர் கொரோனா வைரசால் பாதிக்கப்படவில்லை என்பது உறுதிசெய்யப்பட்டதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பெஞ்சமின் நேட்டன்யாஹூவுடன் அவருக்கு நெருக்கமானவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், அவர்களுக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்காவில் பலி 10 ஆயிரத்தை நோக்கி செல்கிறது: “கொரோனாவுக்கு மலேரியா மருந்தை முன்னரே பயன்படுத்தாதது வெட்கம்” - டிரம்ப் புலம்பல்
கொரோனா வைரசால் அமெரிக்காவில் பலியானவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. கொரோனா சிகிச்சையில் மலேரியா மருந்தை முன்னரே பயன்படுத்தாதது வெட்கக்கேடானது என்று டிரம்ப் கூறினார்.
2. இந்தியாவில் ‘கொரோனாவுக்கு எதிராக நீண்ட போர் தொடங்கி இருக்கிறது’ - பிரதமர் மோடி பேச்சு
இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக நீண்ட போர் தொடங்கி இருப்பதாக பிரதமர் மோடி கூறினார்.
3. குறைந்த அபாய பகுதியாக உகான் நகரம் அறிவிப்பு
கொரோனா வைரஸ் முதன் முதலில் வெளிப்பட்ட உகான் நகரம் குறைந்த அபாய பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
4. இந்தியாவில் கொரோனா தாக்குதலுக்கு ஆளானவர்களில் 83 சதவீதம் பேர், 60 வயதுக்கு உட்பட்டவர்கள்தான் - அதிரவைக்கும் புள்ளி விவரங்கள்
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளானவர்களில் 83 சதவீதம்பேர், 60 வயதுக்கு குறைந்தவர்கள்தான் என்ற அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரம் வெளியாகி இருக்கிறது.
5. கர்நாடகத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா; பாதித்தோர் எண்ணிக்கை 147 ஆக உயர்வு
கர்நாடகத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் அந்த வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 147 ஆக உயர்ந்துள்ளது.