உலக செய்திகள்

ஜேம்ஸ்பாண்ட் பட நடிகைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு: அவெஞ்சர்ஸ் பட நடிகரையும் நோய் தாக்கியது + "||" + Coronavirus infected with jumpsuit film actress: The Avengers movie star also got infected

ஜேம்ஸ்பாண்ட் பட நடிகைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு: அவெஞ்சர்ஸ் பட நடிகரையும் நோய் தாக்கியது

ஜேம்ஸ்பாண்ட் பட நடிகைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு: அவெஞ்சர்ஸ் பட நடிகரையும் நோய் தாக்கியது
ஜேம்ஸ்பாண்ட் பட நடிகைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அவெஞ்சர்ஸ் பட நடிகரையும் கொரோனா வைரஸ் நோய் தாக்கியது.
நியூயார்க்,

உலகை ஆட்டிப்படைத்து கொண்டிருக்கும் உயிர்க்கொல்லி கொரோனா வைரஸ் உலக தலைவர்கள் மற்றும் அவர்களது உறவினர்களை தாக்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது ஹாலிவுட் நடிகர், நடிகைகள் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர்.


கடந்த வாரம் ஆஸ்கார் விருது பெற்ற பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்ஸ் தனக்கும் தனது மனைவியும் நடிகையுமான ரீட்டா வில்சனுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பதாக கூறினார்.

இந்த நிலையில், பிரபல ஹாலிவுட் நடிகை ஓல்கா குரிலென்கோவுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் ஜேம்ஸ்பாண்ட் திரைப்படமான ‘குவாண்டம் ஆப் சோலஸ்’, டாம் குரூஸ் நடித்த ‘ஒபிலிவியான்’ உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ்பெற்றவர். தனக்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்பட்டதால் மருத்துவரின் உதவியை நாடியதாகவும், அதில் தனக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும் ஓல்கா குரிலென்கோ இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.

இதே போல் சூப்பர் ஹீரோ படங்களான ‘தோர்’ மற்றும் ‘அவெஞ்சர்ஸ்’ படங்களில் நடித்து புகழ்பெற்ற பிரபல ஹாலிவுட் நடிகர் இட்ரிஸ் எல்பா தனக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் தனக்கு எந்த அறிகுறிகளும் இல்லாமலேயே வைரஸ் தாக்கியதாகவும், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் மக்கள் எச்சரிக்கையாகவும், நடைமுறைக்கேற்றவாறும் இருக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இதனிடையே கேம் ஆப் திரோன்ஸ் நடிகர் கிறிஸ்டோபர் ஹிவ்ஜுவுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.