உலக செய்திகள்

உக்ரைன் தூதரகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் - ர‌ஷியா விசாரணையை தொடங்கியது + "||" + Terrorist attack on Ukraine embassy - Russia begins investigation

உக்ரைன் தூதரகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் - ர‌ஷியா விசாரணையை தொடங்கியது

உக்ரைன் தூதரகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் - ர‌ஷியா விசாரணையை தொடங்கியது
உக்ரைன் தூதரகத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் தொடர்பாக, ர‌ஷியா விசாரணையை தொடங்கியது.
மாஸ்கோ,

உக்ரைன் நாட்டில் கீவ் நகரில் உள்ள ர‌ஷிய தூதரகத்தின் மீது கடந்த 14-ந் தேதி பயங்கரவாதிகள் ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் ஒரு ராக்கெட் தூதரக கட்டிடத்தின் உச்சியில் விழுந்தது.

இந்த தாக்குதலில் தூதரக ஊழியர்களுக்கோ, அதிகாரிகளுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படாதபோதும், இந்த சம்பவம் ர‌ஷியாவுக்கு பலத்த அதிர்ச்சியை அளித்துள்ளது. இதையடுத்து ர‌ஷிய விசாரணைக்குழு, குற்ற விசாரணையை தொடங்கி உள்ளது.