உலக செய்திகள்

கொரோனா பீதியில் உலகம்: வழக்கம் போல் ஏவுகணை சோதனையில் ஈடுபட்ட வடகொரியா..! + "||" + North Korea fires 2 short-range ballistic missiles into East Sea from North Pyongan Province: Yonhap News Agency

கொரோனா பீதியில் உலகம்: வழக்கம் போல் ஏவுகணை சோதனையில் ஈடுபட்ட வடகொரியா..!

கொரோனா பீதியில் உலகம்:  வழக்கம் போல்  ஏவுகணை சோதனையில் ஈடுபட்ட வடகொரியா..!
உலகமே கொரோனா பீதியில் இருக்கும் நிலையில், இது எதையும் கண்டுகொள்ளாமல் ஏவுகணைகள் சோதனையில் வடகொரியா ஈடுபட்டுள்ளது.
பியாங்யாங்,

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறியும், சர்வதேச நாடுகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் வடகொரியா தொடர்ந்து அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகளை சோதித்து வந்தது. இதனால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வடகொரியா மீது பொருளாதாரத் தடைகள் விதித்தன. 

இந்த விவகாரத்தில் அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே நேரடி மோதல் ஏற்பட்டது. இந்த பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னும் 2 முறை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அணு ஆயுத தயாரிப்பை முழுமையாக கைவிடுமாறு அமெரிக்கா விடுத்த கோரிக்கையை வடகொரியா ஏற்கவில்லை. 

இதனால், அந்த நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகளை விலக்கி கொள்ள டிரம்ப் மறுத்துவிட்டார். இதனால் இருநாட்டுத் தலைவர்களிடையே நடந்த 2 பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்தன. இதையடுத்து வடகொரியா தொடர்ந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதித்து வருகிறது.

கொரோனா பீதியைக் கண்டுகொள்ளாத வடகொரியா

தற்போது உலகமே கொரோனா வைரசால் கடும் அச்சத்தில் இருக்கும் சூழலில் வடகொரியா கடந்த  சில தினங்களுக்கு முன்  குறுகிய தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணைகளை ஏவி சோதித்தது. இது கொரோனாாவால் பெரும் அச்சுறுத்தலை எதிர்கொண்டு வரும் தென்கொரியா மற்றும் ஜப்பானுக்கு கடும் அதிர்ச்சி அளித்தது. 

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் வடகொரியா மீண்டும், சிறிய ரக ஏவுகணைகள் சோதனையை நடத்தியுள்ளது. வடக்கு பியாங் மாகாணத்தில் கிழக்கு கடல் பகுதியில் 2 சிறிய ரக ஏவுகணைகளை வடகொரியா பரிசோதித்ததாக  கொரிய செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. அணு ஆயுத விவகாரம் : அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தும் திட்டம் இல்லை - வடகொரியா
அணு ஆயுத விவகாரம் தொடர்பாக அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தும் திட்டம் இல்லை என வடகொரியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
2. வடகொரியாவில் கொரோனா வைரசா? - மிகுந்த விழிப்புடன் இருக்க கிம் ஜாங் அன் எச்சரிக்கை
கொரோனா வைரஸ் விவகாரத்தில் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும் என அதிகாரிகளை வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் எச்சரித்தார்.
3. வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் மீண்டும் மாயம்; உடல் நலம் குறித்து வதந்திகள்
வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் மீண்டும் பொதுவெளியில் தோன்றி பல நாட்கள் ஆகிவிட்டதால், அவரின் உடல்நலம் பற்றி தற்போது மீண்டும் வதந்திகள் கிளம்ப ஆரம்பித்துவிட்டனர்.
4. மனைவியை ஆபாசமாக சித்தரிக்கும் விளம்பரங்கள் தென் கொரியா மீது வடகொரியா தலைவர் கடும் கோபம்
மனைவியை ஆபாசமாக சித்தரிக்கும் விளம்பரங்களால் தென் கொரியா மீது வடகொரியா தலைவர் கடும் கோபத்தில் உள்ளார்.
5. வடகொரியா அதிபரின் உடல்நிலை குறித்து மீண்டும் சதேகத்தை எழுப்பிய ஜப்பான்
வடகொரியா அதிபரின் உடல்நிலை குறித்து சந்தேகங்கள் இருப்பதாக ஜப்பான் கூறியுள்ளதால், மீண்டும் கிம் ஜாங் உன்னைப் பற்றிய சந்தேகங்கள் எழுத் துவங்கியுள்ளது.