உலக செய்திகள்

சீனாவில் 3 நாட்களுக்கு பிறகு ஒருவருக்கு கொரோனா பாதிப்பு + "||" + China after 3 days someone is affected by corona

சீனாவில் 3 நாட்களுக்கு பிறகு ஒருவருக்கு கொரோனா பாதிப்பு

சீனாவில் 3 நாட்களுக்கு பிறகு ஒருவருக்கு கொரோனா பாதிப்பு
சீனாவில் 3 நாட்களுக்கு பிறகு ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பீஜிங், 

கொரோனாவின் பிறப்பிடமான சீனாவில் கடந்த சில நாட்களாக அந்த வைரசின் தாக்கம் தணிந்து வந்தது. குறிப்பாக கொரோனா கண்டறிப்பட்ட உகான் நகரில் கடந்த 3 நாட்களாக யாருக்கும் புதிதாக தொற்று ஏற்படவில்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் சீனாவில் புதிதாக 46 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

இதில் 45 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். குவாங்டாங் மாகாணத்தை சேர்ந்த ஒருவருக்கும் தொற்று பாதித்துள்ளது. இதன் மூலம் 3 நாட்களுக்கு பிறகு உள்நாட்டை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா பாதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த வைரசுக்கு புதிதாக 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 5 பேர் உகான் நகரத்தை சேர்ந்தவர்கள். அதேவேளையில் உகான் நகரில் புதிதாக யாருக்கும் தொற்று ஏற்படவில்லை.

சீனாவில் கொரோனா வைரசுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 3,261 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 81 ஆயிரத்து 54 ஆக உயர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - 4 ஆயிரம் பேர் பாதிப்பு
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தின் ஷிகூ நகரில் நேற்று முன்தினம் இரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் சுமார் 4,000 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
2. எந்த அறிகுறியும் இல்லாமல் சீனாவில் 1300 பேருக்கு கொரோனா பாதிப்பு
எந்த அறிகுறிகளும் இல்லாமல் 1,300 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.
3. சீனாவில் நேற்று புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று இல்லை!
சீனாவில் நேற்று புதிதாக யாருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என்று செய்திகள் வெளியாகின.
4. சீனாவில் காட்டுத்தீயில் சிக்கி தீயணைப்பு வீரர்கள் 19 பேர் பலி
சீனாவில் காட்டுத்தீயில் சிக்கி தீயணைப்பு வீரர்கள் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
5. உலக அளவில் கொரோனா வைரசுக்கு பலி எண்ணிக்கை 38 ஆயிரத்தை நெருங்கியது
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்தை நெருங்கியுள்ளது.