உலக செய்திகள்

இந்தியாவில் இருந்து உகாண்டா சென்றவருக்கு கொரோனா பாதிப்பு -நாட்டின் முதல் நோயாளி ஆனார் + "||" + Uganda confirms first case of COVID-19

இந்தியாவில் இருந்து உகாண்டா சென்றவருக்கு கொரோனா பாதிப்பு -நாட்டின் முதல் நோயாளி ஆனார்

இந்தியாவில் இருந்து உகாண்டா சென்றவருக்கு கொரோனா பாதிப்பு -நாட்டின் முதல் நோயாளி ஆனார்
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான உகாண்டாவிலும் கொரோனா பாதிப்பு ஏற்படத் தொடங்கியுள்ளது.
மாஸ்கோ, 

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான உகாண்டாவில் கொரோனா பாதிப்பு இல்லாமல் இருந்தது. எனினும் அங்குள்ள சர்வதேச விமான நிலையங்களில் பயணிகளுக்கு தீவிர கொரோனா பரிசோதனைகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில் துபாயில் இருந்து நேற்று அதிகாலை 2 மணிக்கு சென்ற ஒரு விமானத்தில் 36 வயது உகாண்டா நபர் ஒருவரை அதிகாரிகள் பரிசோதித்தனர். அப்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. கடுமையான காய்ச்சல், பசியின்மை போன்றவற்றால் அவதிப்பட்ட அவருக்கு ஆஸ்பத்திரியில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில் தங்கியிருந்த இவர் துபாய் வழியாக உகாண்டா சென்றது தெரியவந்துள்ளது. அவர் மூலம் உகாண்டாவிலும் கொரோனா வைரஸ் கால் பதித்துள்ளது. நாட்டின் முதல் கொரோனா நோயாளி என்ற பெயரையும் பெற்றுள்ளார்.

இதைத்தொடர்ந்து அந்த நபருடன் உகாண்டா சென்ற அனைவரையும் அவர்களது பாஸ்போர்ட் எண்கள் மூலம் கண்டறிந்து தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை அரசு தொடங்கி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கானாவில் சட்டவிரோதமாக தங்க சுரங்கம் நடத்தி வந்ததாக 62 பேர் கைது
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கானாவின் மேற்கு பகுதியில் சட்டவிரோதமாக தங்க சுரங்கம் நடத்தி வந்ததாக 2 பெண்கள் உள்பட 62 பேர் கைது செய்யப்பட்டனர்.
2. ஆப்பிரிக்க நாடுகளில் மேற்கு பகுதியில் சக்தி வாய்ந்த புயல் தாக்குதல் - 9 பேர் பலி
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மடகாஸ்கரின் மேற்கு பகுதியை பெல்னா என்ற சக்தி வாய்ந்த புயல் தாக்கியது. இந்த புயலில் சிக்கி 9 பேர் பலியாகினர்.