உலக செய்திகள்

தாய்லாந்து நிலைமை சீரடைய 9 மாதங்கள் ஆகும்; டாக்டர் எச்சரிக்கை + "||" + The situation in Thailand is 9 months; Doctors Warning

தாய்லாந்து நிலைமை சீரடைய 9 மாதங்கள் ஆகும்; டாக்டர் எச்சரிக்கை

தாய்லாந்து நிலைமை சீரடைய 9 மாதங்கள் ஆகும்; டாக்டர் எச்சரிக்கை
தாய்லாந்து நிலைமை சீரடைய 9 மாதங்கள் ஆகும் என டாக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பாங்காக்,

தாய்லாந்து நாட்டில் நேற்றைய நிலவரப்படி கொரோனா தொற்று புதிய நோயாளிகளின் எண்ணிக்கை 122 ஆகும். ஏற்கனவே 668 பேர் சிகிச்சையில் உள்ளனர். ஒருவர் பலியாகி விட்டார். இதுபற்றி பாங்காக் நகர கவர்னர் அஸ்வின் குவன்முவங்க் கூறுகையில், “எனது கோரிக்கையை ஏற்று பெரும்பாலான மக்கள் வெளியில் செல்லாமல் வீட்டிலேயே உள்ளர்கள். அவர்களுக்கு நன்றி. கடந்த 3 நாட்களில் 10 சதவீதம் பேர் தாய்லாந்தை விட்டு வெளியேறி விட்டனர். அவர்களில் 90 சதவீதம் பேர் வெளிநாட்டவர்” என்றார்.


மகிடோல் பல்கலைக்கழக டீன் டாக்டர் பிரசித் வட்டன்பா விடுத்த எச்சரிக்கையில், “கொரோனா தொற்று என சந்தேகப்படுபவர்கள் வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்தாமல், மருத்துவமனைக்கு வந்துவிட வேண்டும். அரசு அறிவுரைகளை ஏற்காவிட்டால் ஏப்ரல் 15-ந் தேதிக்குள் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மூன்றரை லட்சமாக உயரும். 7 ஆயிரம் பேர் பலியாகி விடுவார்கள். 17 ஆயிரம் பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கும். மருத்துவர்கள் தட்டுப்பாடு காரணமாக, நோயாளிகள் கவனிப்பாரற்ற நிலைக்கு போய்விடுவார்கள். முக கவசம் அணிந்து மிக அருகில் உள்ள இடங்களுக்கு மட்டும் செல்லுங்கள். தற்போதுள்ள நிலைமை முழுமையாக சீரடைவதற்கு 9 மாதங்கள் ஆகும்” என்றார்.


தொடர்புடைய செய்திகள்

1. புதிய காதலனுடன் முன்னாள் காதலி... கோபத்தில் கொடூர செயலை செய்த துறவி
தன் முன்னாள் காதலி வேறொருவருடன் இருப்பதைக் கண்ட துறவி ஒருவர், ஆத்திரத்தில் தன்னிலை மறந்து அந்த பெண்ணை பட்டாக்கத்தியால் வெட்டிக் கொலை செய்துள்ளார்.
2. தாய்லாந்து வணிக வளாகத்தில் புதுமை: வாடிக்கையாளர்களுக்கு சானிடைசர் வழங்க ‘ரோபோ’ நாய்
தாய்லாந்து வணிக வளாகத்தில் வாடிக்கையாளர்களுக்கு சானிடைசர் வழங்க ‘ரோபோ’ நாய் பயன்படுத்தப்படுகிறது.
3. தாய்லாந்தில் ஊரடங்கால் 2 மாதமாக மூடப்பட்டிருந்த பிரபல வாரச்சந்தை மீண்டும் திறப்பு
தாய்லாந்தில் ஊரடங்கால் 2 மாதமாக மூடப்பட்டிருந்த பிரபல ‘சட்டுசக்’ வாரச் சந்தை மீண்டும் திறக்கப்பட்டது. இங்கு 10 ஆயிரம் வியாபாரிகள் கடை வைத்துள்ளனர்.
4. தாய்லாந்து நாட்டினர் ஈரோட்டுக்கு வந்து சென்ற 9 வீதிகளில் போக்குவரத்துக்கு தடை; 696 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்
தாய்லாந்து நாட்டினர் ஈரோட்டுக்கு வந்து சென்ற 9 வீதிகளில் போக்குவரத்துக்கு தடைவிதிக்கப்பட்டு கடைகள் அடைக்கப்பட்டன. மேலும் அந்த பகுதியில் 696 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
5. தாய்லாந்து வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு: கொலையாளியை போலீசார் சுட்டுக்கொன்றனர்
தாய்லாந்து வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பலியானோரின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்தது. 17 மணி நேர போராட்டத்துக்கு பின் கொலையாளியை போலீசார் சுட்டுக்கொன்றனர்.