உலக செய்திகள்

வெளிநாடு சென்று திரும்பியதால் தனிமைப்படுத்திக் கொண்ட போட்ஸ்வானா நாட்டு ஜனாதிபதி + "||" + Botswana’s president in self-isolation after trip

வெளிநாடு சென்று திரும்பியதால் தனிமைப்படுத்திக் கொண்ட போட்ஸ்வானா நாட்டு ஜனாதிபதி

வெளிநாடு சென்று திரும்பியதால் தனிமைப்படுத்திக் கொண்ட போட்ஸ்வானா நாட்டு ஜனாதிபதி
வெளிநாடு சென்று திரும்பியதால் போட்ஸ்வானா நாட்டு ஜனாதிபதி தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.
கபோரோன்,

கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக விவாதிக்க போட்ஸ்வானாவின் ஜனாதிபதி கடந்த வாரம் அண்டை நாடான நமீபியாவுக்கு சென்றிருந்தார். அங்கு பிற நாட்டு தலைவர்களுடன் நடந்த சந்திப்பில் பங்கேற்றுவிட்டு நாடு திரும்பினார்.


இந்தநிலையில் நமீபியாவில் 3 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதால், போட்ஸ்வானா நாட்டின் ஜனாதிபதி மோக்வீட்சி மாசிசி தன்னை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தி உள்ளார். குடும்பத்தினரிடம் இருந்து தனிமைப்படுத்தி கொண்டாலும், அலுவலக இல்லத்தில் இருந்து தொடர்ந்து அவர் பணியாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஜனாதிபதியுடன் நமீபியாவுக்கு சென்ற ஊழியர்களும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.