உலக செய்திகள்

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் + "||" + Powerful earthquake in China

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
பீஜிங்,

சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள தன்னாட்சி பிராந்தியமான உய்குரில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி அதிகாலை 3.21 மணிக்கு அங்குள்ள யிங்பாஷா நகரை நிலநடுக்கம் தாக்கியது.

ரிக்டர் அளவுகோலில் 5.0 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக சீன புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. சில வினாடிகள் நீடித்த இந்த நிலநடுக்கத்தின்போது வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் பீதியடைந்த மக்கள் அலறியடித்தபடி வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர்.


எனினும் இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்போ அல்லது யாருக்கும் காயம் ஏற்பட்டதாகவோ தகவல்கள் இல்லை. அதேபோல் பெரிய அளவில் பொருள் சேதம் ஏற்பட்டதாகவும் தெரியவில்லை.

தொடர்புடைய செய்திகள்

1. எந்த அறிகுறியும் இல்லாமல் சீனாவில் 1300 பேருக்கு கொரோனா பாதிப்பு
எந்த அறிகுறிகளும் இல்லாமல் 1,300 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.
2. சீனாவில் நேற்று புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று இல்லை!
சீனாவில் நேற்று புதிதாக யாருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என்று செய்திகள் வெளியாகின.
3. சீனாவில் காட்டுத்தீயில் சிக்கி தீயணைப்பு வீரர்கள் 19 பேர் பலி
சீனாவில் காட்டுத்தீயில் சிக்கி தீயணைப்பு வீரர்கள் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
4. உலக அளவில் கொரோனா வைரசுக்கு பலி எண்ணிக்கை 38 ஆயிரத்தை நெருங்கியது
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்தை நெருங்கியுள்ளது.
5. சீனாவில் புதிதாக 31 பேருக்கு கொரோனா பாதிப்பு, 4 பேர் பலி
சீனாவில் புதிதாக 31 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு தேசிய சுகாதார கமிஷன் தெரிவித்துள்ளது.