உலக செய்திகள்

கொரோனா பீதியால் கொலம்பியா சிறையில் கலவரம்: 23 கைதிகள் சுட்டுக்கொலை + "||" + Colombia jail riots: Coroner panicked: 23 prisoners shot dead

கொரோனா பீதியால் கொலம்பியா சிறையில் கலவரம்: 23 கைதிகள் சுட்டுக்கொலை

கொரோனா பீதியால் கொலம்பியா சிறையில் கலவரம்: 23 கைதிகள் சுட்டுக்கொலை
கொரோனா பீதி காரணமாக கொலம்பியாவில் உள்ள சிறையில் கலவரம் வெடித்தது. அதனை தொடர்ந்து 23 கைதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
போகோடா,

மத்திய அமெரிக்க நாடான கொலம்பியாவில் கொரோனா வைரசின் தாக்கம் தீவிரமாக உள்ளது. அங்கு இந்த கொடிய வைரசால் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 231 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. வைரஸ் பரவுவதை தடுக்க அந்த நாட்டு அரசு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.


அதன்படி அங்கு இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் நாடு தழுவிய தனிமைப்படுத்தல் தொடங்குகிறது. இது 19 நாட்களுக்கு நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மருத்துவ ஊழியர்கள், பாதுகாப்பு படைகள் மற்றும் பல்பொருள் அங்காடி ஊழியர்களை தவிர்த்து மக்கள் அனைவரும் வீடுகளுக்குள்ளேயே இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

குறிப்பாக 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் மே மாதம் இறுதி வரை வீட்டுக்குள் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இதனிடையே அந்த நாட்டில் சிறைகளில் அளவுக்கு அதிகமான கூட்டம் இருப்பதோடு, சுகாதார சேவைகளும் மோசமாக இருப்பதால் கொரோனா வைரஸ் வேகமாக பரவும் அச்சம் நிலவுகிறது.

இதனை கண்டித்து நாடு முழுவதிலும் உள்ள 132 சிறைகளில் கைதிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்குள்ள சிறைகளில் பதற்றமான சூழல் நீடிக்கிறது.

இந்த நிலையில் தலைநகர் போகோடாவில் உள்ள நாட்டின் மிகப்பெரிய சிறையில் கைதிகள் நடத்திய போராட்டத்தின் போது திடீர் கலவரம் வெடித்தது. இதை பயன்படுத்தி கைதிகள் பலர் சிறையை உடைத்து தப்பி ஓட முயற்சித்தனர்.

இதனால் பெரும் பதற்றம் உருவானது. இதையடுத்து சிறையில் கலவர தடுப்பு போலீசார் குவிக்கப்பட்டனர். அவர்களுடன் கைதிகள் பயங்கர மோதலில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதில் கைதிகள் 23 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 83 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் 30-க்கும் மேற்பட்ட போலீசாரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டு உள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் தொடர்பாக வருத்தம் தெரிவித்துள்ள அந்த நாட்டின் நீதித்துறை மந்திரி மர்காரிட்டா கேபெல்லோ சிறையில் சுகாதார பிரச்சினைகள் இருப்பதாக கூறுவது முற்றிலும் தவறானது என்றும் கைதிகள் கொரோனாவை காரணம் காட்டி கலவரத்தில் ஈடுபட்டு தப்பிக்க முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டினார்.


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பீதியில் உலக நாடுகள்: வடகொரியா ஏவுகணை சோதனை
உலக நாடுகள் கொரோனா பீதியில் உறைந்திருக்கும் நிலையில் வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியது.
2. கொரோனா பீதிக்கு மத்தியில் ஹாரி-மேகன் தம்பதி அமெரிக்காவில் குடியேற்றம்
கொரோனா பீதிக்கு மத்தியில் ஹாரி-மேகன் தம்பதி அமெரிக்காவில் குடியேறினர்.
3. கொரோனா பீதியால் வீட்டில் இருந்து வேலை செய்யும் மத்திய மந்திரிகள்; அவசியமற்ற சந்திப்புகள் தவிர்ப்பு
கொரோனா வைரஸ் பீதியால் மத்திய மந்திரிகள் பலரும் தங்கள் வீடுகளில் இருந்துகொண்டே அலுவலக பணிகளை கவனிக்கிறார்கள். அவசியமற்ற சந்திப்புகளை அவர்கள் தவிர்க்கிறார்கள்.
4. கொரோனா பீதி; பாகிஸ்தான் எதிர்க்கட்சி தலைவர் லண்டனில் இருந்து நாடு திரும்பினார்
கொரோனா பீதிக்கு மத்தியில் பாகிஸ்தான் எதிர்க்கட்சி தலைவர் லண்டனில் இருந்து நாடு திரும்பினார்
5. கொரோனா பீதிக்கு மத்தியிலும் இந்திய ஆண்கள், பெண்கள் ஆக்கி அணிகள் தொடர்ந்து பயிற்சி
கொரோனா பீதிக்கு மத்தியிலும் இந்திய ஆக்கி அணிகளின் ஒலிம்பிக் பயிற்சி தடையின்றி தொடருகிறது.