கொரோனா அச்சுறுத்தல்: 3 வாரங்களுக்கு பிரிட்டன் முடக்கம்


கொரோனா அச்சுறுத்தல்:  3 வாரங்களுக்கு பிரிட்டன் முடக்கம்
x
தினத்தந்தி 24 March 2020 4:10 AM GMT (Updated: 24 March 2020 4:10 AM GMT)

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 3 வாரங்களுக்கு பிரிட்டன் முடக்கப்படுவதாக அந்நாட்டு பிரதமர் அறிவித்துள்ளார்.

லண்டன், 

சீனாவின் உகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ், இத்தாலியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அமெரிக்கா, பிரிட்டன் போன்ற வல்லரசு நாடுகளும் கொரோனா வைரஸ் பாதிப்புக்குத் தப்பவில்லை. பிரிட்டனில் நாளுக்கு நாள் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

தற்போது வரை கொரோனா தொற்றுக்கு 330-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

இந்நிலையில், கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.  நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலமாக உரையாற்றிய போரிஸ் ஜான்சன்,  3 வாரங்கள் பிரிட்டன் முடக்கப்படுவதாகத் தெரிவித்தார். மேலும், உணவு, மருந்து ஆகிய அத்தியாவசியப் பொருட்களை வாங்க மட்டுமே வீடுகளை விட்டு வெளியே வர அனுமதிக்கப்படுவர் என்று தெரிவித்துள்ளார். 

பொது இடங்களில் இரண்டு நபர்களுக்கு மேல் கூடுவது தடை செய்யப்படுவதாகவும், அரசின் கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.

Next Story