உலக செய்திகள்

இலங்கையில் 2 வாரங்களில் கொரோனா தொற்று 20 ஆயிரமாக அதிகரிக்க கூடும்; மருத்துவர்கள் எச்சரிக்கை + "||" + sri lanka coronavirus warning

இலங்கையில் 2 வாரங்களில் கொரோனா தொற்று 20 ஆயிரமாக அதிகரிக்க கூடும்; மருத்துவர்கள் எச்சரிக்கை

இலங்கையில் 2 வாரங்களில் கொரோனா தொற்று 20 ஆயிரமாக அதிகரிக்க கூடும்; மருத்துவர்கள் எச்சரிக்கை
இலங்கையில் 2 வாரங்களில் கொரோனா தொற்று 20 ஆயிரமாக அதிகரிக்க கூடும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
கொழும்பு

உலகை அச்சுறுத்தி வரும்  கொரோனா உலகம் முழுவதும் 195 நாடுகளுக்கு பரவி உள்ளது. உலகம் முழுவதும் கொரோனோ வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 3 லட்சத்து 78 ஆயிரத்து 842 ஆக உயர்ந்துள்ளது.  கொரோனா தாக்கியதில் மொத்தம் 16 ஆயிரத்து 510 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தாக்குதலுக்கு உலகளவில் அதிகபட்சமாக  இத்தாலியில்  6 ஆயிரத்து 77 பேர் உயிரிழந்துள்ளனர்.
 
இந்த நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை இரண்டு வாரங்களில் 20 ஆயிரமாக அதிகரிக்கும் வாய்ப்புக்கள் இருக்கின்றன என்றும் உரிய தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் ஆபத்து என்றும் மருத்துவ அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் வடக்கு மாகாண சுகாதார மையத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மருத்துவர்கள் இது குறித்து பேசினர்.

அப்போது உலக அளவில் கொரோனா பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இலங்கையிலும் கொரோனா தொற்றுக்கு இலக்கான 86 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இலங்கையில் கொரோனா தொற்று பரவும் வீதம் தொடர்பான வரைபடமும் உலகின் மற்ற நாடுகளில் பரவும் வீதம் தொடர்பான வரைபடமும் ஒத்துப் போகின்றது.

இது அப்படியே தொடருமானால் இன்னும் இரண்டு வாரங்களில் இலங்கையில் 20 ஆயிரம் பேர் கொரோனா தொற்றுக்கு இலக்காவார்கள். அவ்வாறு நடக்கக் கூடாது என்பதுதான் எங்களின் விருப்பம்.உரிய தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் ஆபத்து ஏற்படும்" என்று கூறி உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பாதிப்பு: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 106 புதிய பாதிப்புகள் - 6 இறப்புகள் பதிவாகியுள்ளன
கடந்த 24 மணி நேரத்தில், 106 புதிய பாதிப்புகள் மற்றும் 6 இறப்புகள் பதிவாகியுள்ளன என சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் இணை செயலாளர் லாவ் அகர்வால் கூறி உள்ளார்.
2. கொரோனா வைரஸுக்கு எதிரான 'வெற்றியை' கொண்டாட சீன மார்க்கெட்களில் மீண்டும் பாம்பு, நாய்,வவ்வால் விற்பனை
கொரோனா வைரஸுக்கு எதிரான 'வெற்றியை' கொண்டாடும் சீனா மார்க்கெட்களில் பாம்பு, நாய்,பூனை வவ்வால்கள் விற்பனை மீண்டும் தொடங்கின.
3. சென்னை-நகரங்களில் ஊரடங்கை மீறி இறைச்சி -மீன் கடைகளில் கட்டுப்பாடற்ற கூட்டம்
சென்னை மற்றும் நகரங்களில் ஊரடங்கையும் மீறி இன்று ஞாயிற்றுக்கிழமை இறைச்சி மற்றும் மீன் கடைகளில் கட்டுப்பாடற்ற முறையில் மக்கள் கூட்டம் குவிந்தது.
4. சீனாவுக்கு அடுத்த தலைவலி ஹூபே மாகாணத்தில் வெடிக்கும் கலவரம்
ஹூபே மாகாணத்தில் இருந்து மக்கள் வெளியேற முயற்சிப்பதால் ஆங்காங்கே வன்முறை வெடித்துள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன
5. உலகை அச்சுறுத்தும் கொரோனா; கவலையின்றி ஏவுகணை சோதனையில் வடகொரியா
கொரோனா வைரஸ் வெடிப்பின் மத்தியில் வட கொரியா முன்னெப்போதையும் விட அதிக ஏவுகணைகளை சோதனை செய்து வருகிறது.