உலக செய்திகள்

சீனாவில் கட்டுக்குள் வரும் கொரோனா: உகான் நகரில் கட்டுப்பாடுகள் தளர்வு + "||" + China to lift travel curbs on Hubei province, including Wuhan

சீனாவில் கட்டுக்குள் வரும் கொரோனா: உகான் நகரில் கட்டுப்பாடுகள் தளர்வு

சீனாவில் கட்டுக்குள் வரும் கொரோனா: உகான் நகரில் கட்டுப்பாடுகள் தளர்வு
கொரோனா வைரசின் பிறப்பிடமான உகான் நகரில் பயணக்கட்டுப்பாடுகள் இன்று நள்ளிரவு முதல் தளர்த்தப்படுகிறது.

பெய்ஜிங்,

உலக நாடுகளை இன்று மிரட்டி வரும் கொரோனா வைரஸ் , முதன் முதலில் சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் உள்ள உகான் நகரில்தான் வெளிப்பட்டது.  கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்  இந்த வைரஸ், தாக்கம் தெரியத்தொடங்கியது. சீனாவின் உகான் நகரில் கடுமையான பாதிப்பை கொரோனா வைரஸ் ஏற்படுத்தியது. இதன் காரணமாக ஹூபெய் மாகாணத்தை சீனா முடக்கியது. பயணக்கட்டுப்பாடுகளையும் விதித்தது. 

கொரோனா வைரசை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் சீன அரசு நடவடிக்கை மேற்கொண்டது. 
உகான் நகரம் முழுவதும் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர். நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தற்காலிக மருத்துவமனைகள் அமைக்கப்பட்டன. ராணுவ மருத்துவர்கள், செவிலியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.  

சீனாவில் ஒட்டுமொத்தமாக 81,171 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 3,277 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சீன அரசு மேற்கொண்ட அதிதீவிர நடவடிக்கைகளால் கொரோனா வைரஸ் பரவுவது கிட்டதட்ட கட்டுக்குள் வந்துள்ளது. 

கொரோனா வைரஸ் பரவுவது கட்டுக்குள் வந்துள்ளதால்,  ஹுபெய் மாகாணம் முழுவதும் பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இன்று இரவு முதல், ஆரோக்கியமான உடல் நலம் கொண்டவர்கள் மாகாணத்திற்கு வெளியே செல்ல அனுமதி அளிக்கப்படும் என்று சீன அரசு தெரிவித்துள்ளது.  இரண்டு மாதங்களுக்கு பிறகு மாகாணத்திற்கு வெளியே பயணிக்க ஹூபே மக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: பீதியடைந்த மக்கள் வீதிகளில் தஞ்சம்
சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பீதியடைந்த மக்கள் வீதிகளில் தஞ்சமடைந்தனர்.
2. சீனா-இந்தியா மோதல் அதிகரித்தால் டிரம்ப் இந்தியாவை ஆதரிப்பார் என்பதற்கு உத்தரவாதம் இல்லை- அமெரிக்கா முன்னாள் ஆலோசகர்
சீனாவுக்கும், இந்தியாவுக்கும் இடையிலான மோதல் அதிகரித்தால் டிரம்ப் இந்தியாவை ஆதரிப்பார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்று அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் கூறி உள்ளார்.
3. சீனாவின் அதிகார நாடகம்: நேபாள ஆளும் கட்சியின் நிலைக்குழு 5-வது முறை ஒத்திவைக்கப்பட்டது
சீனாவின் அதிகார நாடகத்தால் நேபாள ஆளும் கட்சியின் நிலைக்குழு 5 முறை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
4. சீனாவின் நிலைப்பாட்டை நியாயப்படுத்த அனுமதித்தது ஏன்? - ராகுல் காந்தி கேள்வி
இந்திய வீரர்கள் 20 பேரை படுகொலை செய்த சம்பவத்தில் சீனா தனது நிலைப்பாட்டை நியாப்படுத்த இந்திய அரசு அனுமதித்தது ஏன்? என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
5. மோடி அரசின் திறமையற்ற நிர்வாகத்தை மறைக்க மோடி லடாக் பயணம்- சீன ஊடகம்
மோடி அரசின் திறமையற்ற நிர்வாகம் மற்றும் பொருளதாரா மந்த நிலை யை மறைக்கும் வகையில் மோடி இந்த லடாக் பயணத்தை மேற்கொண்டுள்ளார் என சீன ஊடகம் கூறி உள்ளது.