ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கலுக்கு கொரோனா பாதிப்பு இல்லை


ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கலுக்கு கொரோனா பாதிப்பு இல்லை
x
தினத்தந்தி 24 March 2020 9:14 AM GMT (Updated: 24 March 2020 9:14 AM GMT)

ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கலுக்கு கொரோனா பாதிப்பு இல்லை முதல் கட்ட பரிசோதனையில் தெரியவந்து உள்ளது.

பெர்லின்

ஜெர்மனியில் 24,852 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது இதுவரை, 120க்கும் மேற்பட்டோர்  இறந்துள்ளனர். 

இந்த நிலையில் ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கலின் டாக்டருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, அவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கலுக்கு நிமோனியா நோய்த்தொற்றுக்கான தடுப்பு மருந்து கடந்த வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டுள்ளது. அந்த தடுப்பூசி போட்ட டாக்டருக்கு, கொரோனா தொற்றியிருப்பது  உறுதி செய்யப்பட்டது. கொரோனா பாதித்தவரின் சுற்றுப்புறத்தில் இருந்தவர் என்ற வகையில், தற்போது ஏஞ்சலா மெர்க்கல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருந்தவாறே அவர் பணிகளை கவனித்து வந்தார்.

இதைத் தொடர்ந்து 65 வயதான ஏஞ்சலா மெர்க்கலுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் அவருக்குக் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று முதற்கட்டப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய ஏஞ்சலாவின் செய்தித் தொடர்பாளர் ஸ்டெஃபன் செபர்ட்

இன்றைய பரிசோதனை முடிவில் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கலுக்கு கொரோனா பாதிப்பு இல்லை. இரண்டாவது பரிசோதனை விரைவில் எடுக்கப்படும்.

தற்போது கரோனா வைரஸ் அறிகுறிகள் எதுவும் மெர்க்கலாவிடம் இல்லை. அவர் நலமுடன் இருக்கிறார். வீட்டில் இருந்தபடியே நாட்டுப் பணிகளைக் கவனித்து வருகிறார்'' என்று தெரிவித்துள்ளார்.


Next Story