உலக செய்திகள்

ஸ்பெயினில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 514 பேர் பலி + "||" + In Spain, 514 people were killed in a single day

ஸ்பெயினில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 514 பேர் பலி

ஸ்பெயினில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 514 பேர் பலி
ஸ்பெயினில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 514 பேர் பலியாகி உள்ளனர்.
மாட்ரிட்,

ஸ்பெயின் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 514 பேர் பலியாகி உள்ளனர். இதனால் அங்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2,800 ஆக உயர்ந்துள்ளது. வைரஸ் தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கையும் ஒரே நாளில் 6,600 அதிகரித்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.


இதைத்தொடர்ந்து அந்நாட்டு பிரதமர் பெட்ரோ சான்செஸ், நெருக்கடி நிலையை மேலும் 2 வாரங்களுக்கு ஏப்ரல் 11-ந் தேதி வரை நீட்டிக்க நாடாளுமன்ற ஒப்புதலை எதிர்நோக்கி உள்ளார். இத்தாலி, சீனாவுக்கு அடுத்ததாக 3-வது இடத்தில் ஸ்பெயின் உள்ளது.

அருகில் உள்ள இத்தாலி இப்போது இந்த தொற்றுநோயின் மையமாக உள்ளது. அங்கு 6 ஆயிரம் பேருக்கு மேல் பலியாகி உள்ளனர். 65 ஆயிரம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. குறைந்த அபாய பகுதியாக உகான் நகரம் அறிவிப்பு
கொரோனா வைரஸ் முதன் முதலில் வெளிப்பட்ட உகான் நகரம் குறைந்த அபாய பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2. இந்தியாவில் கொரோனா தாக்குதலுக்கு ஆளானவர்களில் 83 சதவீதம் பேர், 60 வயதுக்கு உட்பட்டவர்கள்தான் - அதிரவைக்கும் புள்ளி விவரங்கள்
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளானவர்களில் 83 சதவீதம்பேர், 60 வயதுக்கு குறைந்தவர்கள்தான் என்ற அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரம் வெளியாகி இருக்கிறது.
3. கர்நாடகத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா; பாதித்தோர் எண்ணிக்கை 147 ஆக உயர்வு
கர்நாடகத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் அந்த வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 147 ஆக உயர்ந்துள்ளது.
4. மும்பையில் கொரோனாவுக்கு 30 பேர் பலி - 433 பேருக்கு பாதிப்பு
மும்பையில் கொரோனாவுக்கு இதுவரை 30 பேர்பலியாகி உள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 433 ஆக உயர்ந்து உள்ளது.
5. அமெரிக்காவில் கொரோனா பலி எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியது - 1½ மாத கைக்குழந்தை உயிரிழந்த பரிதாபம்
அமெரிக்காவில் கொரோனா பலி எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியது. இந்த நோய் தாக்கி பிறந்து 6 வாரங்களே ஆன கைக்குழந்தை பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.