உலக செய்திகள்

அரண்மனை ஊழியர்களுக்கு கொரோனா மலேசியா மன்னர் - ராணி தனிமைபடுத்தப்பட்டனர் + "||" + Malaysia’s king, queen under quarantine after 7 palace employees test positive for COVID-19

அரண்மனை ஊழியர்களுக்கு கொரோனா மலேசியா மன்னர் - ராணி தனிமைபடுத்தப்பட்டனர்

அரண்மனை ஊழியர்களுக்கு கொரோனா மலேசியா மன்னர் - ராணி தனிமைபடுத்தப்பட்டனர்
அரண்மனை ஊழியர்கள் ஏழு பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், மலேசியா மன்னர் மற்றும் ராணி தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கோலாலம்பூர்

கொரோனா பாதிப்பால் உலகில் பலியானோரின் எண்ணிக்கை 21 ஆயிரத்தை தாண்டியுள்ளது. ஏழை நாடுகள், வளர்ந்து வரும் நாடுகள், பணக்கார நாடுகள் என வேறுபாடின்றி அனைத்து நாடுகளையும் கொரோனா புரட்டி போட்டு வருகிறது.அந்த வரிசையில் மலேசியாவும் உள்ளது. தற்போது அந்நாட்டில் 2,031 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 23 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் அங்கிருக்கும் அரண்மனை ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து மலேசிய அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில் , அரண்மனையைச் சேர்ந்த ஊழியர்கள் 7 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குடு  கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது, அவர்களுகு எவ்வாறு இது ஏற்பட்டது என சுகாதாரத்துறை ஆய்வு செய்து வருகிறது.

இதனையடுத்து மலேசிய மன்னர் கிங் சுல்தான் அப்துல்லா மற்றும் மலேசிய ராணி துன்கு அஜிசா அமினா மைமுனாவுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.இதில், அவர்கள் இருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் அவர்கள் தொடர்ந்து 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா வைரஸ் பாதிப்பு:கிழக்கு ஆசியாவில் 1.10 கோடி மக்கள் வறுமை நிலைக்குத் தள்ளப்படுவார்கள் -உலக வங்கி
கொரோனா வைரஸ் காரணமாக பொருளாதார வீழ்ச்சி காரணமாக, கிழக்கு ஆசியாவில் 1.10 கோடி மக்கள் வறுமை நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்று உலக வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.
2. எந்த அறிகுறியும் இல்லாமல் சீனாவில் 1300 பேருக்கு கொரோனா பாதிப்பு
எந்த அறிகுறிகளும் இல்லாமல் 1,300 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.
3. கொரோனா பரவுவது குறித்து முதலில் எச்சரித்த பெண் டாக்டர் மாயம்
கொரோனா வைரஸ் பரவுவதைப் பற்றி மற்ற மருத்துவர்களை முதன்முதலில் எச்சரித்த உகான் பெண் டாக்டர் பேசுவதற்காக அவர் தடுத்து வைக்கப்பட்டு இருந்தார். தற்போது அவர் மாயமாகி உள்ளார்.
4. நன்கொடை அளிப்போருக்கு 100% வரிவிலக்கு அளிக்க அவசர சட்டம்!
பிரதமரின் நிவாரண நிதிக்கு வழங்கும் நன்கொடைக்கு 100% வரிவிலக்கு அளிக்க அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
5. டெல்லி நிஜாமுதீன் மார்க்கஸில் இருந்து 36 மணி நேரத்தில் 2,300 க்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்
டெல்லி நிஜாமுதீன் மார்க்கஸில் இருந்து 36 மணி நேரத்தில் 2,300 க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டு உள்ளனர், 617 அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.