உலக செய்திகள்

கொரோனா தொற்று நோய்: சீனா மீது 20 டிரில்லியன் டாலர் கேட்டு அமெரிக்க வக்கீல் வழக்கு + "||" + USD 20 trillion lawsuit filed against China for 'creation, release of coronavirus'

கொரோனா தொற்று நோய்: சீனா மீது 20 டிரில்லியன் டாலர் கேட்டு அமெரிக்க வக்கீல் வழக்கு

கொரோனா தொற்று நோய்: சீனா மீது 20 டிரில்லியன் டாலர் கேட்டு அமெரிக்க வக்கீல் வழக்கு
கொரோனா தொற்று நோயை பரப்பியதற்காக சீனா மீது 20 டிரில்லியன் டாலர் கேட்டு அமெரிக்க வக்கீல் வழக்கு
வாஷிங்டன்

சீனாவின் ஹூபே மாகாணம் உகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.  உலகம் முழுவதும் இதுவரை 5 லட்சத்து 29 ஆயிரத்து 614 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. இவர்களில் இதுவரை 23 ஆயிரத்து 976 பேர் உயிரிழந்துள்ளனர்.  மேலும், 3 லட்சத்து 82 ஆயிரத்து 258 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 976 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் சீனா, ஐரோப்பிய நாடுகளை தொடர்ந்து தற்போது அமெரிக்காவில் நிலை கடுமையாக பரவி வருகிறது.

இந்த நிலையில் சீனாவுக்கு எதிராக அமரிக்காவின் பிரபல வக்கீல் ஒருவர் வழக்கை தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கில் சீனாவிடம் இருந்து 20 டிரில்லியன் டாலர்களை அவர் நஷ்டஈடாக கோரியுள்ளார். இந்த வழக்கை அவர் டெக்சாஸின் வடக்கு மாவட்டத்திற்கான அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் தொடர்ந்து உள்ளார்.

இலங்கை போன்ற நாடுகளும் சீனாவுக்கு எதிராக இவ்வாறான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் அமெரிக்கா வக்கீல் கேட்டுள்ளார்.

லாரி கிலாய்மான் என்ற இந்த வக்கீல் முன்னாள் ஜனாதிபதி ரொனால்ட் ரீகனின நிர்வாகத்தின் கீழ் அரசு வக்கீலாக இருந்தவராவார்.

இந்தநிலையில் தாம் இலங்கையர்கள் உட்பட்டவர்களுடன் இணைந்து சீனாவுக்கு எதிராக செயற்பட எதிர்பார்ப்பதாக கிலாய்மான் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் சீனாவில் உருவாக்கப்பட்டது. போரின் உயிரியல் ஆயுதமாகவே அதனை சீனா உருவாக்கியது.இந்தநிலையில் சீனாவின் இந்த உயிரியல் ஆயுதம் சர்வதேச உடன்படிக்கைகளுக்கு எதிரானது. அத்துடன் இதனை உகானில் உள்ள நச்சு உயிரியல் தொடர்பான படிப்பியல் நிறுவனத்தில் இருந்து பொறுப்பற்ற வகையில் வெளியில் பரப்பியதன் மூலம் அங்குள்ள பணியாளர்கள் சமூகத்தில் பரவுவதை தடுக்க தவறிவிட்டனர்.அதேநேரம் அமெரிக்காவில் பெருகவும் வழிவகுத்தனர் என்றும் அமெரிக்க வக்கீல்  குற்றம் சுமத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா வைரஸ்: பிரேசில் இந்த வாரத்தில் நான்காவது முறையாக 1,000 இறப்புகளைப் பதிவு செய்தது
கொரோனா வைரஸ்: பிரேசில் இந்த வாரத்தில் நான்காவது முறையாக 1,000 இறப்புகளைப் பதிவு செய்து உள்ளது. அங்கு மொத்தம் இறப்பு எண்ணிக்கை 24,512 ஆக உள்ளது.
2. தொடரும் வேதனை: சென்னையில் மேலும் ஒரு கொரோனா நோயாளி தற்கொலை
சென்னையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒரு கொரோனா நோயாளி தற்கொலை செய்து கொண்டார்.
3. எல்லையில் சீனாவின் எதிர்ப்பை மீறி சாலை பணிகள் தொடரும்: இந்தியா அதிரடி முடிவு
இந்திய-சீன எல்லையில், சீனாவின் எதிர்ப்பை மீறி சாலை பணிகளை தொடர இந்தியா முடிவு செய்துள்ளது.
4. கொரோனா தோற்றம் பற்றிய விசாரணை: சீனாவுக்கு உலக சுகாதார நிறுவனம் பாராட்டு
கொரோனா தோன்றியது குறித்த விசாரணைக்கு ஒத்துழைப்பதாக சீனா கூறியதற்கு உலக சுகாதார நிறுவனம் பாராட்டு தெரிவித்துள்ளது.
5. கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரிப்பு; கேரள செயல்பாடுகள் தோல்வியடைகிறதா?
கேரள செயல்பாடுகள் தோல்வியடைகிறதா? புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் சுகாதார ஊழியர்களிடையே பரவுவது அதிகாரிகளை கவலையடையச் செய்கிறது.