உலக செய்திகள்

பிலிப்பைன்ஸ் ராணுவ தளபதிக்கு கொரோனா பாதிப்பு + "||" + Corona vulnerability to Philippine army commander

பிலிப்பைன்ஸ் ராணுவ தளபதிக்கு கொரோனா பாதிப்பு

பிலிப்பைன்ஸ் ராணுவ தளபதிக்கு கொரோனா பாதிப்பு
பிலிப்பைன்ஸ் ராணுவ தளபதிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மணிலா, 

பிலிப்பைன்ஸ் நாட்டில் 707 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 45 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், அந்நாட்டு ராணுவ தளபதி பெலிமோன் சான்டோஸ் ஜூனியருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தாக்கிய ஒரு ராணுவ அதிகாரியை சந்தித்ததால், அவர் கடந்த 4 நாட்களாக தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருந்தார். தற்போது, அவருக்கு கொரோனா உறுதி ஆனபோதிலும், அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படவில்லை. அவர் குடியிருக்கும் ராணுவ குடியிருப்பிலேயே அவரது உடல்நிலையை டாக்டர்கள் கண்காணித்து வருகிறார்கள். அவர் அங்கிருந்தே தனது பணிகளை கவனிப்பார் என்று பிலிப்பைன்ஸ் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுபோல், அவரை சந்தித்த அந்நாட்டு சுகாதாரத்துறை மந்திரி, பாதுகாப்பு செயலாளர் டெல்பின் லோரன்சானா ஆகியோரும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் 24 மணி நேரத்தில் கொரோனாவில் இருந்து 56 ஆயிரம் பேர் மீட்பு
இந்தியாவில் 24 மணி நேரத்தில் கொரோனாவில் இருந்து 56 ஆயிரம் பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
2. ரஷ்யாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9 லட்சத்தை தாண்டியது
ரஷ்யாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 9 லட்சத்தை தாண்டியுள்ளது.
3. ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,876 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
ஒடிசாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1,876 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 50,000 கடந்தது.
4. மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு கொரோனா
தமிழக அரசின் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
5. குடியாத்தம் தாலுகாவில் 38 பேருக்கு கொரோனா
குடியாத்தம் தாலுகாவில் 38 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.