ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கொரோனா வைரஸ் தடுப்பூசி மனிதர்கள் மீதான மருத்துவ சோதனைக்கு தயாராகிறது


ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கொரோனா வைரஸ் தடுப்பூசி மனிதர்கள் மீதான மருத்துவ சோதனைக்கு தயாராகிறது
x
தினத்தந்தி 28 March 2020 9:42 AM GMT (Updated: 28 March 2020 9:42 AM GMT)

கொரோனா தடுப்பூசி ஆக்ஸ்போர்டு பல்கலைகழக மருத்துவ ஆராய்ச்சிக் குழுவினர் சாதனை

லண்டன்

கொரோனா தொற்றும் அதனால் ஏற்படும் மரணங்களும் அதி வேகத்தில் உயர்ந்து கொண்டிருக்கும் நிலையில், நம்பிக்கை கீற்றாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பில் முதலாவது கட்டத்தை அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தின் தேம்ஸ் பள்ளத்தாக்கில் இருக்கும் ஆய்வகத்தில் இதற்கான கிளினிக்கல் சோதனைகளை நடத்துவதற்காக18 வயது முதல் 55 வயது வரை உள்ள 510 தன்னார்வலர்கள் நேற்று முதல் தேர்வு செய்யப்பட்டு வருவதாக அது தெரிவித்துள்ளது.

அடீனோவைரஸ் வேக்சின் வெக்டர் மற்றும் சார்ஸ் கொரோனா-2 புரதம் அடிப்படையில் இந்த தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் வைரல் வெக்டேர்டு தொழில்நுட்பம் சிறந்ததாக கருதப்படுவதால், சோதனை முடிவுகள் நம்பிக்கை அளிப்பதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2014 ல் மேற்கு ஆப்பிரிக்காவை தாக்கிய எபோலா வைரசை கட்டுப்படுத்தும் தடுப்பூசியை வெற்றிகரமாக உருவாக்கியது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனாவுக்கு எதிரான முயற்சிகளை ஒருங்கிணைக்கும் உலக இயற்பியல், தொற்றுநோய் தயாரிப்பு மேம்பாடுகளுக்கான கூட்டணி (CEPI) ஆல் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் நிதியளித்த எட்டு அமைப்புகளில்  மாடர்னா மற்றும் ஆக்ஸ்போர்டு  கல்லூரிகள் உள்ளன. மற்ற ஆறு நிறுவனம்  க்யூர்வாக், இன்னோவியோ, இன்ஸ்டிட்யூட் பாஷர், நோவாவாக்ஸ் மற்றும் ஹாங்காங் மற்றும் குயின்ஸ்லாந்து கல்லூரிகள் உள்ளன.

Next Story