உலக செய்திகள்

கொரோனா பீதிக்கு மத்தியில் ஹாரி-மேகன் தம்பதி அமெரிக்காவில் குடியேற்றம் + "||" + Harry-Megan couple immigrating to the United States amid Corona panic

கொரோனா பீதிக்கு மத்தியில் ஹாரி-மேகன் தம்பதி அமெரிக்காவில் குடியேற்றம்

கொரோனா பீதிக்கு மத்தியில் ஹாரி-மேகன் தம்பதி அமெரிக்காவில் குடியேற்றம்
கொரோனா பீதிக்கு மத்தியில் ஹாரி-மேகன் தம்பதி அமெரிக்காவில் குடியேறினர்.
ஒட்டாவா, 

இங்கிலாந்து இளவரசர் ஹாரி-மேகன் தம்பதி அரச குடும்பத்தில் இருந்து விலகுவதாக கடந்த ஜனவரி மாதம் அறிவித்தனர். சுயமாக சம்பாதித்து வாழ விரும்புவதாக தெரிவித்த அவர்கள் தங்களது 10 மாத ஆண் குழந்தை ஆர்ச்சியுடன் இங்கிலாந்தில் இருந்து வெளியேறி கனடாவின் பிரிட்டிஸ் கொலம்பியா மாகாணத்தில் குடியேறினர்.

இந்த நிலையில் சீனாவில் உருவான உயிர்க்கொல்லி கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் நிலையில், ஹாரி-மேகன் தம்பதி கனடாவில் இருந்து நிரந்தரமாக வெளியேறி அமெரிக்காவில் குடியேறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஹாரியின் தந்தையும் இளவரசருமான சார்லசுக்கு கொரோனா தொற்று உறுதி செய்ய சில நாட்களுக்கு பிறகு தம்பதி இருவரும் அமெரிக்காவில் குடியேறிய தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா வைரசால் அமெரிக்கா கடும் நெருக்கடியை எதிர்கொண்டு வரும் அவர்கள் குடியேறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக எல்லைகள் முழுமையாக பூட்டப்படுவதற்கு முன்பாக ஹாரி-மேகன் தம்பதி கனடாவில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு சென்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பீதியால் சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகள் மறுப்பு இரட்டை குழந்தைகள் பெற்ற 10 நாட்களில் இளம்பெண் சாவு மூச்சு திணறலால் உயிரிழந்த பரிதாபம்
பெங்களூருவில், கொரோனா பீதியால் சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகள் மறுத்ததால் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்ட இளம்பெண் இறந்தார். அந்த இளம்பெண் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தான் இரட்டை குழந்தைகள் பெற்று இருந்தார்.
2. கொரோனா பீதி: குண்டாறு அணைக்கு வரும் சுற்றுலா பயணிகளை தடுத்து பொதுமக்கள் போராட்டம் - பாதையை அடைத்து போலீஸ் பாதுகாப்பு
கொரோனா பீதியால் செங்கோட்டை குண்டாறு அணைக்கு குளிக்க வரும் சுற்றுலா பயணிகளை அப்பகுதி பொதுமக்கள் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அணைக்கு செல்லும் பாதை அடைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
3. கொரோனா பீதிக்கு மத்தியில் தென்கொரியாவில் நாடாளுமன்ற தேர்தல்; விறுவிறு வாக்குப்பதிவு
கொரோனா பீதிக்கு தென்கொரியாவில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.
4. கொரோனா பீதியில் உலக நாடுகள்: வடகொரியா ஏவுகணை சோதனை
உலக நாடுகள் கொரோனா பீதியில் உறைந்திருக்கும் நிலையில் வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியது.
5. கொரோனா பீதியால் வீட்டில் இருந்து வேலை செய்யும் மத்திய மந்திரிகள்; அவசியமற்ற சந்திப்புகள் தவிர்ப்பு
கொரோனா வைரஸ் பீதியால் மத்திய மந்திரிகள் பலரும் தங்கள் வீடுகளில் இருந்துகொண்டே அலுவலக பணிகளை கவனிக்கிறார்கள். அவசியமற்ற சந்திப்புகளை அவர்கள் தவிர்க்கிறார்கள்.