உலக செய்திகள்

அமெரிக்காவை மிரட்டும் கொரோனா; நியூயார்க நகரை தனிமைபடுத்த தேவையில்லை- டொனால்டு டிரம்ப் + "||" + Trump drops idea of New York lockdown as U.S. death count crosses 2,000

அமெரிக்காவை மிரட்டும் கொரோனா; நியூயார்க நகரை தனிமைபடுத்த தேவையில்லை- டொனால்டு டிரம்ப்

அமெரிக்காவை மிரட்டும் கொரோனா; நியூயார்க நகரை தனிமைபடுத்த தேவையில்லை- டொனால்டு டிரம்ப்
அமெரிக்காவை மிரட்டும் கொரோனா தொற்று; நியூயார்க நகரை சீனா உகான் நகரைப்போல் தனிமை படுத்த டிரம்ப் அதிரடி திட்டத்தில் இருந்து பின்வாங்கினார்.
நியூயார்க்

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துவிட்ட நிலையில், இதில் நியூயார்க்கில் மட்டும் 52,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றின் மையமாக நியூயார்க் இருப்பதால், வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அந்நகரத்தை தனிமைப்படுத்துவது குறித்து சிந்திப்பதாக அமெரிக்க ஜனாதிபதி 
டொனால் டிரம்ப் கூறி உள்ளார்.

ஆனால், அதிபர் டிரம்பின் இந்த யோசனையை நியூயார்க் ஆளுநர் கடுமையாக விமர்சித்தார். இது ''விபரீதமானது'', ''அமெரிக்காவிற்கு எதிரானது'', ''போர் அறிவிப்பு போன்றது'' என்று நியூயார்க் ஆளுநர் ஆன்ட்ரு தெரிவித்தார்.

நியூயார்க்கில் ஏற்கனவே மக்களை தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும், மக்கள் அதிகமாக பொது இடங்களில் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் ஆளுநர் கூறியுள்ளார். எனவே அந்நகரை முழுமையாக முடக்குவதற்கு ஆளுநர் ஆண்ட்ரு எதிர்ப்பு தெரிவித்தார்.
"நியூயார்க்கிற்கு முழுமையாக தடை விதித்தால், சீனாவின் வுஹான் போல நாம் ஆகிவிடுவோம், இதனால் எந்த பலனும் இல்லை" என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நியூயார்க் பகுதிக்கு பயண எச்சரிக்கையை வெளியிடுவதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்  தெரிவித்தார், பிராந்தியத்தை முழுவதுமாக துண்டிக்க முயற்சிக்கலாம் என்ற முந்தைய ஆலோசனையிலிருந்து பின்வாங்கினார். 

"நியூயார்க்கை தனிமைப்படுத்த தேவையில்லை," என்று அவர் டுவிட்டரில் கூறி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ”இந்தியாவை அமெரிக்கா நேசிக்கிறது” : அமெரிக்க அதிபர் டிரம்ப் டுவிட்
இந்தியாவை அமெரிக்கா நேசிக்கிறது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
2. சென்னையில் கொரோனா பாதிப்பு சமூக பரவலாக மாறவில்லை- சென்னை மாநகராட்சி ஆணையர்
சென்னையில் கொரோனா பாதிப்பு சமூக பரவலாக மாறவில்லை என சென்னை மாநகராட்சி ஆணையர் பிராகாஷ் கூறி உள்ளார்.
3. ஆகஸ்ட் 15 க்குள் தடுப்பூசி: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கேட்பது அபத்தமானது - ஆபத்தானது விஞ்ஞானிகள் எச்சரிக்கை
ஆகஸ்ட் 15 க்குள் தடுப்பூசி: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கேட்பது அபத்தமானது மற்றும் ஆபத்தானது என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
4. சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்
சென்னை முழுவதும் மொத்தமாக 64 ஆயிரத்து 689 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
5. கொரோனா பாதிப்பு : தமிழ்நாடு உள்பட 4 மாநிலங்களில் தேசிய சராசரியை விட அதிகரித்து வருகிறது
கொரோனா பாதிப்பு: தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா ஆந்திரா மாநிலங்களில் தேசிய சராசரியை விட அதிகரித்து வருகிறது.