உலகை அச்சுறுத்தும் கொரோனா; கவலையின்றி ஏவுகணை சோதனையில் வடகொரியா


உலகை அச்சுறுத்தும் கொரோனா; கவலையின்றி ஏவுகணை சோதனையில் வடகொரியா
x
தினத்தந்தி 29 March 2020 4:37 AM GMT (Updated: 29 March 2020 4:37 AM GMT)

கொரோனா வைரஸ் வெடிப்பின் மத்தியில் வட கொரியா முன்னெப்போதையும் விட அதிக ஏவுகணைகளை சோதனை செய்து வருகிறது.

சியோல்

உலக நாடுகள் முழுவதும் கொரோனா வைரசுக்கு எதிராக மிகப்பெரிய போரை நடத்தி வருகின்றன. ஆனால் கொரோனா வைரஸ் வெடிப்பின் மத்தியில் வட கொரியா முன்னெப்போதையும் விட அதிக ஏவுகணைகளை சோதனை செய்து வருகிறது.

கடலோர வொன்சன் பகுதியில் இருந்து இரண்டு "குறுகிய தூர ஏவுகணைகள்" ஏவப்பட்டன, இவை 230 கிலோமீட்டர் (143 மைல்) அதிகபட்சமாக 30 கிலோமீட்டர் (19 மைல்) உயரத்தில் பறந்தன என்று தென் கொரியாவின் கூட்டுத் தளபதிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா தொற்று காரணமாக  உலகம் முழுவதும் சிரமங்களை அனுபவிக்கும் சூழ்நிலையில், வட கொரியாவின் இந்த வகையான இராணுவ நடவடிக்கை மிகவும் பொருத்தமற்றது, உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று நாங்கள் கேட்டு கொள்கிறோம் என்று தென் கொரியா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது என யோன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது.

இந்த மாதம் நான்கு சுற்று சோதனைகளில் ஏவப்பட்ட எட்டாவது மற்றும் ஒன்பதாவது ஏவுகணைகளாக இவைகள் உள்ளன. ஏனெனில் வட கொரிய படைகள் தொடர்ந்து இராணுவ பயிற்சிகளை மேற்கொள்கின்றன, பொதுவாக தலைவர் கிம் ஜாங் உன் தனிப்பட்ட முறையில் இதனை மேற்பார்வையிட்டு வருகிறார்.


Next Story