பிரான்ஸ் நாட்டு முன்னாள் மந்திரி கொரோனாவுக்கு பலி


பிரான்ஸ் நாட்டு முன்னாள் மந்திரி கொரோனாவுக்கு பலி
x
தினத்தந்தி 30 March 2020 12:11 AM GMT (Updated: 30 March 2020 12:11 AM GMT)

பிரான்ஸ் நாட்டு முன்னாள் மந்திரி கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக உயிரிழந்தார்.

பாரீஸ், 

பிரான்சில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அங்கு இந்த உயிர்க்கொல்லி வைரசுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டி உள்ளது. 33 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில், அந்த நாட்டின் முன்னாள் மந்திரி கொரோனா வைரசுக்கு பலியாகி உள்ளார். முன்னாள் பிரதமர் பிராங்கோயிஸ் பில்லன் ஆட்சியில் 2008 முதல் 2010 வரை மந்திரியாக பதவி வகித்தவர் பட்ரிக் தேவேட்ஜியன்.

85 வயதான இவர், தனக்கு கொரோனா வைரசுக்கான அறிகுறிகள் இருப்பதாக கடந்த புதன்கிழமை தெரிவித்தார்.

அதன்பின்னர் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து, ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார்.

Next Story