உலக அளவில் கொரோனா வைரசுக்கு பலி எண்ணிக்கை 34 ஆயிரத்தை தாண்டியது


உலக அளவில் கொரோனா வைரசுக்கு பலி எண்ணிக்கை 34 ஆயிரத்தை தாண்டியது
x
தினத்தந்தி 30 March 2020 7:41 AM GMT (Updated: 30 March 2020 7:41 AM GMT)

உலக அளவில் கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 34 ஆயிரத்தை தாண்டியது.

பாரீஸ், 

உலக அளவில் கொரோனா வைரசுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் பலியாகி வருகிறார்கள். அந்த வகையில் நேற்று ஒரே நாளில் சுமார் 3,000 பேர் பலியாகினர். இதில், இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் பலியானவர்கள் மட்டும் பாதிக்கும் மேற்பட்டோர் ஆவர்.

இதன் மூலம் உலக அளவில் கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 34 ஆயிரத்தை தாண்டியது. அதே போல் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்தை கடந்துள்ளது. சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் குணமடைந்து உள்ளனர்.

உலக அளவில் இத்தாலியில் அதிகமாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். சுமார் 93 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஸ்பெயின் நாட்டில் 6 ஆயிரத்து 500-க்கும் அதிகமானோர் பலியானார்கள். 78 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஈரானில் 2 ஆயிரத்து 600-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 38 ஆயிரத்தை தாண்டியிருக்கிறது. பிரான்ஸ் நாட்டில் பலி எண்ணிக்கை 2,500-ஐ நெருங்கி இருக்கும் நிலையில், 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள். உருகுவே, நியூசிலாந்து, மாலி ஆகிய நாடுகளில் முதல் பலி ஏற்பட்டுள்ளது.
மொத்த உயிர்ப்பலியில் ஐரோப்பா கண்டத்தில் மட்டும் மூன்றில் இரண்டு பங்கு உயிர்ப்பலி ஏற்பட்டுள்ளது.


Next Story