உலக செய்திகள்

கொரோனா சிகிச்சைக்கு 3 மருந்துகள் தயார் - ரஷியா தகவல் + "||" + 3 drugs ready for coronary treatment - Russia

கொரோனா சிகிச்சைக்கு 3 மருந்துகள் தயார் - ரஷியா தகவல்

கொரோனா சிகிச்சைக்கு 3 மருந்துகள் தயார் - ரஷியா தகவல்
கொரோனா வைரசை குணப்படுத்த வாய்ப்புள்ள 3 மருந்துகள் தயாராக இருப்பதாக ரஷிய விஞ்ஞான அகாடமியின் துணைத்தலைவரும், உயிரி மருத்துவ அறிவியல் பிரிவின் தலைவருமான விளாடிமிர் செகோனின் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது:-
மாஸ்கோ,

ரஷிய விஞ்ஞான அகாடமியின் கிளையில் பல ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டது. அதை கொரோனாவை குணப்படுத்த பயன்படுத்தலாமா என்று சீன விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். தற்போது, வைரஸ் சுவாச தொற்றை குணப்படுத்துவதற்கான ஒரு விசேஷ இன்ஹேலர் தயாராக உள்ளது. அது, கொரோனா சிகிச்சைக்கு உகந்ததாக இருக்கும் என்று கருதுகிறோம். 

ஜப்பானிய மருந்து ஒன்றின் அடிப்படையில், மற்றொரு மருந்து ரஷியாவில் தயாரிக்கப்பட்டுள்ளது. இன்னொரு மருந்து, ஆய்வுக்கூட பரிசோதனை முடிந்து, கொரோனா சிகிச்சைக்கான பரிசோதனைக்கு தயாராக உள்ளது. இந்த 3 மருந்துகளையும் பரிசோதிப்பதற்கு முன்னுரிமை அளித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா சிகிச்சை பிரிவாக மாற்ற எதிர்ப்பு: அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன் பொதுமக்கள் போராட்டம்
சித்தையன்கோட்டையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை கொரோனா சிகிச்சை பிரிவாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2. கொரோனா சிகிச்சைக்காக ரெம்டெசிவிர் மருந்தை அதிகாரப்பூர்வமாக்கியது ஜப்பான்
கொரோனா சிகிச்சைக்காக ரெம்டெசிவிர் மருந்தை ஜப்பான் அதிகாரப்பூர்வமாக்கி உள்ளது.
3. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 909 பெருக்கு கொரோனா தொற்று- சுகாதாரத்துறை
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 909 பெருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
4. கொரோனா சிகிச்சை; 40 ஆயிரம் படுக்கைகள் தயார்: இந்திய ரெயில்வே அறிவிப்பு
கொரோனா சிகிச்சைக்காக 40 ஆயிரம் படுக்கைகளை இந்திய ரெயில்வே முதற்கட்டத்தில் தயார்படுத்தி உள்ளது.
5. கொரோனா சிகிச்சையின் போது மருத்துவ ஊழியர்களை அவமதித்தவர்கள் மீது வழக்கு பதிவு - உத்தரபிரதேச போலீசார் நடவடிக்கை
உத்தரபிரதேசத்தில், ஆஸ்பத்திரியில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்கள் மருத்துவ ஊழியர்களை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதால், அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.