உலக செய்திகள்

உலக அளவில் கொரோனா வைரசுக்கு பலி எண்ணிக்கை 38 ஆயிரத்தை நெருங்கியது + "||" + 785,777cases globally; death toll surges to 37,811

உலக அளவில் கொரோனா வைரசுக்கு பலி எண்ணிக்கை 38 ஆயிரத்தை நெருங்கியது

உலக அளவில் கொரோனா வைரசுக்கு பலி எண்ணிக்கை 38 ஆயிரத்தை நெருங்கியது
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்தை நெருங்கியுள்ளது.
பாரீஸ், 

உலக அளவில் கொரோனா வைரசுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் பலியாகி வருகிறார்கள். அந்த வகையில் நேற்று ஒரே நாளில் சுமார் 3,000 பேர் பலியாகினர். இதில், இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் பலியானவர்கள் மட்டும் பாதிக்கும் மேற்பட்டோர் ஆவர்.

இதன் மூலம் உலக அளவில் கொரோனா வைரசுக்குப் பலியானோர் எண்ணிக்கை 38 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி  37,815 பேரை கொரோனா வைரஸ் பலியாக்கியிருக்கிறது.  அதே போல் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்தைக் கடந்துள்ளது.  சுமார் 1, 65 ஆயிரம் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர்.

உலக அளவில் இத்தாலியில்  11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது.  ஸ்பெயின் நாட்டில்  7ஆயிரத்து 500-க்கும் அதிகமானோர் பலியானார்கள். 88 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,64 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,165- ஆக உள்ளது. வைரசின் பிறப்பிடமான சீனாவில் புதிதாக 79 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

 ஈரானில் 2 ஆயிரத்து 700-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 41 ஆயிரத்தைத் தாண்டியிருக்கிறது. பிரான்ஸ் நாட்டில் பலி எண்ணிக்கை 3 ஆயிரத்தைக் கடந்துள்ளது. 44 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள்.  மொத்த உயிர்ப்பலியில் ஐரோப்பா கண்டத்தில் மட்டும் மூன்றில் இரண்டு பங்கு உயிர்ப்பலி ஏற்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. சீனாவில் உகானை அடுத்து மேலும் ஒரு நகரில் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை
சீனாவில் உகான் நகரைத் தொடர்ந்து 28 லட்சம் பேரைக்கொண்ட மேலும் ஒரு நகரில் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
2. சீனாவில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் 39 பேருக்கு கத்தி குத்து
சீனாவின் தொடக்கபள்ளிக்கூடம் ஒன்றில் நடந்த தாக்குதலில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் 39 பேருக்கு கத்தி குத்து காயம் ஏற்பட்டு உள்ளது.
3. சீனாவில் கொரோனாவால் முன்னணி டாக்டர் இறந்ததால் பின்னடைவு
சீனாவில் கொரோனாவால் முன்னணி டாக்டர் ஒருவர் இறந்ததால் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
4. சிங்கப்பூரில் கொரோனா பாதிப்பு 36 ஆயிரத்தை தாண்டியது
சிங்கப்பூரில் கொரோனா பாதிப்பு தற்போது 36 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
5. பதற்றத்திற்கு மத்தியில் பாகிஸ்தானின் குவாடர் துறைமுகத்தை வலுப்படுத்தி வரும் சீனா
பாகிஸ்தானின் குவாடர் துறைமுகத்தில் சீனா தனது கடற்படை தளத்தை வேகமாக வலுப்படுத்தி வருகிறது என்பதை சமீபத்திய செயற்கைக்கோள் படங்கள் வெளிப்படுத்தியுள்ளன.