கொரோனா குறித்த பிரேசில் அதிபரின் பதிவை நீக்கிய டுவிட்டர் நிறுவனம்


கொரோனா குறித்த பிரேசில் அதிபரின் பதிவை நீக்கிய டுவிட்டர் நிறுவனம்
x
தினத்தந்தி 31 March 2020 11:55 PM GMT (Updated: 31 March 2020 11:55 PM GMT)

கொரோனா குறித்த பிரேசில் அதிபரின் பதிவை டுவிட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது.

பிரேசிலியா, 

உயிர்க்கொல்லி கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 180-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி ஆட்டிப்படைத்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த பெரும்பாலான நாடுகள் தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றன.

ஆனால் பிரேசில் அதிபர் ஜெயீர் போல்சனரோ ஆரம்பத்தில் இருந்தே தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். தனிமைப்படுத்தல் மூலம் வைரசை கட்டுப்படுத்த முடியாது என்றும், மாறாக அது பொருளாதார பாதிப்பை மட்டுமே உருவாக்கும் என்றும் அவர் கூறிவருகிறார்.

இந்த நிலையில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு எதிரான 2 வீடியோக்களை அதிபர் ஜெயீர் போல்சனரோ டுவிட்டரில் பதிவிட்டார். வழக்கமான பணிகளை தொடர்ந்து செய்ய விரும்புவதாகவும், வைரசில் இருந்து தப்பித்தாலும் பட்டினியால் இறந்துவிடுவோம் என்றும் பொதுமக்கள் கூறும் வகையில் இந்த வீடியோக்கள் இருந்தன.

இந்த வீடியோக்கள் பொது சுகாதார அறிவுறுத்தலுக்கு முரணான கருத்துகளை கொண்டிருப்பதாகவும், கொரோனா குறித்த தவறான புரிதலை மக்களுக்கு ஏற்படுத்தும் என்றும் கூறி 2 வீடியோக்களையும் டுவிட்டர் நிறுவனம் நீக்கியது.

Next Story