உலக செய்திகள்

கொரோனா பரவுவது குறித்து முதலில் எச்சரித்த பெண் டாக்டர் மாயம் + "||" + Wuhan doctor who was among the first to alert other medics to the spread of coronavirus 'goes missing' amid fears she has been detained for speaking out

கொரோனா பரவுவது குறித்து முதலில் எச்சரித்த பெண் டாக்டர் மாயம்

கொரோனா பரவுவது குறித்து முதலில் எச்சரித்த பெண் டாக்டர் மாயம்
கொரோனா வைரஸ் பரவுவதைப் பற்றி மற்ற மருத்துவர்களை முதன்முதலில் எச்சரித்த உகான் பெண் டாக்டர் பேசுவதற்காக அவர் தடுத்து வைக்கப்பட்டு இருந்தார். தற்போது அவர் மாயமாகி உள்ளார்.
பெய்ஜிங்

2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி, உகான் மருத்துவமனை ஒன்றில் பணி புரியும்  ஐ பென் என்ற பெண் டாக்டருக்கு சார்ஸ் கொரோனா வைரஸ் என்று குறிப்பிடப்பட்ட ஒரு நோயாளியின் ரிப்போர்ட் கிடைத்தது. அதைப் படித்துப்பார்த்த டாக்டர் ஐ  அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து மற்றொரு டாக்டரான லி வென் லியாங் என்பவருக்கு தகவலை தெரிவித்தார். டாக்டர் லியாங்  பொய்யான வதந்திகளை பரப்பியதாக அரசால் தண்டிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் சார்ஸ் என்ற வார்த்தையை வட்டமிட்டு, படம் ஒன்றை தனது முன்னாள் வகுப்பு தோழர்களுக்கும், தனது துறையிலேயே உள்ள சக டாக்டர்கள் குழு ஒன்றிற்கும் அனுப்பியிருந்தார். அந்த படம் வேகமாக சமூக ஊடகங்களில் பரவியது.இந்த வைரஸ் குறித்து தனது மருத்துவமனை அதிகாரிகளையும் எச்சரித்துள்ளார்.சார்ஸ் நோய் குறித்த தகவலை வெளியிட்டதால் மருத்துவமனை நிர்வாகம் டாக்டர் ஐயை கடுமையாக எச்சரித்தது.

பின்னர் சீன ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த டாகடர் ஐ தான் முன்கூட்டியே எச்சரித்தும், அதை மருத்துவமனை நிர்வாகம் அலட்சியப்படுத்தியதாக தெரிவித்திருந்தார்.

இன்று நடக்கப்போவதை நான் முன்பே அறிந்திருந்தால், அதாவது இவ்வளவு பயங்கரமாக கொரோனா பரவி, இத்தனை உயிர்களை பலி வாங்கும் என்று தெரிந்திருந்தால், தான் கண்டிக்கப்பட்டதற்காக கவலைப்பட்டிருக்கவேமாட்டேன்.

டாக்டர் லி உட்பட அவரது நான்கு சகாக்கள் வைரஸ் பாதிப்புக்குள்ளானதும், பலியானபோதும் அதிகம் பேசாததற்கு வருத்தப்படுகிறேன்.

இன்று என்ன நடந்திருக்கும் என்று எனக்குத் தெரிந்திருந்தால், நான் கண்டிப்பதைப் பற்றி அக்கறை காட்டியிருக்க மாட்டேன். நான் எங்கு வேண்டுமானாலும் சொல்லியிருப்பேன் 'என்று டாக்டர் ஐ கூறினார்.

ஆனால், அந்த பேட்டிக்குப்பின் டாக்டர் திடீரென மாயமாகியுள்ளார். இதனால், அவர் கைது செய்யப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இதற்கிடையில் டாக்டர் லியாங் மட்டுமின்றி அவருடன் பணியாற்றிய மூன்று டாக்டர்களும் கொரோனாவுக்கு பலியாகிவிட்டது குறிப்பிடத்தக்கது.

இப்போது கூட, முக்கிய அரசியல்வாதிகள் சீன அரசால் அறிவிக்கப்பட்ட தொற்று மற்றும் இறப்பு எண்ணிக்கை தவறாக இருக்கக்கூடும் என்று எச்சரித்துள்ளனர் -உகானின் மையப்பகுதியில் உள்ள உள்ளூர்வாசிகள் உண்மையான எண்ணிக்கையை விட பத்து மடங்கு அதிகமாக இருக்கலாம் என்று பரிந்துரைக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா வைரஸ் தானே பலவீனமடைந்து வருகிறதா...? ஆராய்ச்சியாளர்கள் இடையே கடும் விவாதம்...
கொரோனா வைரஸ் தன்னை பலவீனப்படுத்தி முடிவுக்கு வந்துவிடுமா என்பது குறித்த விவாதம் எழுந்து உள்ளது.
2. லடாக்கில் நீடிக்கும் பதற்றம்... எல்லையில் ஆயுதங்களை குவிக்கும் இருநாட்டு படைகள்!
லடாக் எல்லை பிரச்சினையில் பதற்றம் இன்னும் தணியாத சூழலில், இந்தியாவும், சீனாவும் ஏராளமான ஆயுதங்களை எல்லையில் குவிக்கத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
3. சலூன்கள், பியூட்டி பார்லர் சென்றால் கட்டாயம் ஆதார் அட்டை - தமிழக அரசு
சலூன்கள், ஸ்பா மற்றும் அழகு நிலையங்களுக்கு செல்லுபவர்கள் கட்டாயம் ஆதார் அட்டை எடுத்துச் செல்ல வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
4. சென்னை மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு ; ராயபுரம் மண்டலத்தில் தொடர்ந்து பாதிப்பு அதிகரிப்பு
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் இதுவரை 2,935 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
5. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை நெருங்குகிறது
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,98,706 ஆக உயர்ந்து உள்ளது.