உலக செய்திகள்

அமெரிக்காவில் கொரோனா வைரசுக்கு எவ்வளவு பேர் பலியாக வாய்ப்பு? வெள்ளை மாளிகை தகவல் + "||" + Coronavirus could kill more Americans than WWI, Vietnam or Korean wars, White House projection shows

அமெரிக்காவில் கொரோனா வைரசுக்கு எவ்வளவு பேர் பலியாக வாய்ப்பு? வெள்ளை மாளிகை தகவல்

அமெரிக்காவில் கொரோனா வைரசுக்கு எவ்வளவு பேர் பலியாக வாய்ப்பு? வெள்ளை மாளிகை தகவல்
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 1 லட்சத்தில் இருந்து 22 லட்சம் பேர் வரை உயிரிழக்க கூடும் என வா‌ஷிங்டன் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
வா‌ஷிங்டன், 

வல்லரசு நாடான அமெரிக்காவில் தற்போது கொரோனா வைரஸ் ருத்ர தாண்டவமாடி வருகிறது. ஏறத்தாழ 25 கோடி மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கிற போதும், கொரோனா வைரஸ் பரவுவது அங்கு கட்டுக்குள் இல்லாத நிலை நீடிக்கிறது. பால்டிமோர் நகரில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழக தகவல் மையத்தின் புள்ளி விவரப்படி, அமெரிக்க நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று காலை நிலவரப்படி 1 லட்சத்து 89 ஆயிரத்தை கடந்துள்ளது. மேலும், பலியானவர்களின் எண்ணிக்கை 4,100-ஐ எட்டுகிறது.

அமெரிக்க மாகாணங்களில் நியுயார்க்கில்தான் அதிகபட்சமாக 75 ஆயிரத்து 800-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதித்து உள்ளது. அங்கு 1,700 பேருக்கு மேற்பட்டோர் இந்த வைரஸ் தொற்றுநோய்க்கு பலியாகி இருக்கிறார்கள். இந்தநிலையில் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் நோயால் மொத்த பலி எண்ணிக்கை எந்தளவுக்கு செல்லும் என்பது குறித்து வா‌ஷிங்டன் வெள்ளை மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது. நிபுணர்கள் கணிப்புபடி குறைந்தபட்சம் 1 லட்சம் பேர் பலியாக வாய்ப்பு உள்ளது; நிலைமை மிக மோசமாகிற போது 22 லட்சம் பேர் வரை உயிரிழக்க வாய்ப்பு உள்ளது என்பதுதான் வா‌ஷிங்டன் வெள்ளை மாளிகை நேற்று வெளியிட்ட தகவலாக இருக்கிறது.

அதாவது தொற்று நோயை கட்டுப்படுத்துவதற்கு அதிகாரிகள் எடுத்து வருகிற முயற்சிகள் பலன் அளிக்கிறபோது பலி எண்ணிக்கை 1 லட்சத்தில் இருந்து 2 லட்சத்து 40 ஆயிரம் வரை இருக்கலாம். கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலை அதிகாரிகளால் கட்டுப்படுத்த முடியாத நிலை உருவாகிறபோது பலி எண்ணிக்கை 15 லட்சத்தில் இருந்து 22 லட்சம் வரை போகலாம்.

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் வரும் 15-ந் தேதி ஒரே நாளில் உச்ச அளவாக 2,214 பேர் உயிரிழக்க வாய்ப்பு இருப்பதாகவும் அதிகாரிகள் கணித்துள்ளனர்.அதன் பின்னர் இறப்புவீதம் குறைந்து விடுமாம். ஜூன் 1-ந் தேதிக்குள் தினமும் இறப்புவீதம் 250 ஆக இருக்கும். ஜூலை 1-ந் தேதி வாக்கில் இது தினந்தோறும் 100-க்கு கீழே வந்து விடும் என்று அதிகாரிகள் கணித்திருப்பதாக வெள்ளை மாளிகை சொல்கிறது.தொடர்புடைய செய்திகள்

1. காய்கறி-பழங்களை தொட்டுப்பார்த்து வாங்காதீங்க-கொரோனா பீதி காரணமாக வியாபாரிகள் கண்டிப்பு
கொரோனா பீதி காரணமாக காய்கறி, பழங்களை தொட்டுப்பார்த்து பொதுமக்கள் வாங்கக்கூடாது என வியாபாரிகள் கண்டிப்புடன் சொல்லி விடுகிறார்கள்.
2. கொரோனா வைரஸ் தோற்றம் பற்றி ஆராய அடுத்த வாரம் சீனா செல்கிறது உலக சுகாதார நிறுவன குழு
கொரோனா வைரஸ் தோற்றம் பற்றி ஆராய்ந்து அறிவதற்காக உலக சுகாதார நிறுவனத்தின் வல்லுனர் குழு அடுத்த வாரம் சீனா செல்கிறது.
3. கொரோனா தொற்றால் சென்னையில் மேலும் 23 பேர் உயிரிழப்பு
கொரோனா தொற்றால் சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை மட்டும் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.
4. உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.11 கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.11 கோடியாக உயர்ந்துள்ளது.
5. இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 20,903 பேருக்கு கொரோனா தொற்று
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 20,903 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.