அடுத்த சில நாட்களில் உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 10 லட்சத்தை தாண்டும் - உலக சுகாதார அமைப்பு


அடுத்த சில நாட்களில்  உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 10 லட்சத்தை தாண்டும் - உலக சுகாதார அமைப்பு
x
தினத்தந்தி 2 April 2020 8:40 AM IST (Updated: 2 April 2020 8:40 AM IST)
t-max-icont-min-icon

அடுத்த சில நாட்களில் உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்புகளின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.

ஜெனீவா

உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறியதாவது:-

உலகளவில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்புகளின் எண்ணிக்கை வேகமாக 10 லட்சத்தை நெருங்குகிறது. "கடந்த ஐந்து வாரங்களில் புதிய பாதிப்புகளின் எண்ணிக்கையில் அதிவேக வளர்ச்சி ஏற்பட்டுள்ளது மற்றும் கடந்த வாரத்தில் இறப்புகளின் எண்ணிக்கை இரு மடங்கிற்கும் அதிகமாக உள்ளது.

அடுத்த சில நாட்களில் உலகளவில் 10 லட்சம் உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகளையும் 50,000 இறப்புகளையும் நாங்கள் அடைவோம் என கூறினார்.

இந்தியாவில், மார்ச் 31 முதல் ஏப்ரல் 1 வரை 437 புதிய கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன, இது நாட்டில் மொத்த கொரோனா வைரஸ் பாதிப்புகளின் எண்ணிக்கையை 1,834 ஆகக் கொண்டுள்ளது, இதில் 1,649 செயலில் உள்ள பாதிப்புகள் மற்றும் 41 உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளன என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Next Story