உலக செய்திகள்

உலக நாடுகளை விட அமெரிக்காவில் நாளுக்கு நாள் அதிவேகமாக பரவும் கொரோனா + "||" + Confirmed Coronavirus Cases Are Growing Faster In The United States Than Any Other Country In The World

உலக நாடுகளை விட அமெரிக்காவில் நாளுக்கு நாள் அதிவேகமாக பரவும் கொரோனா

உலக நாடுகளை விட அமெரிக்காவில் நாளுக்கு நாள் அதிவேகமாக பரவும் கொரோனா
உலக நாடுகளை விட அமெரிக்காவில் நாளுக்கு நாள் அதிவேகமாக கொரோனா .வைரஸ் பரவி வருகிறது.
வாஷிங்டன்

உலக நாடுகளைவிட அதிவேகமாக அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. அமெக்காவில் கொரோனா பாதிப்பால், 5,116 பேர் உயிரிழந்து உள்ளனர், அதே நாளில், அமெரிக்கா 24 மணி நேரத்தில் 884 பேர் உயிரிழந்து உள்ளனர்.

அமெரிக்காவின் இறப்பு எண்ணிக்கை இத்தாலி மற்றும் ஸ்பெயினைக் காட்டிலும் குறைவாக உள்ளது, ஆனால் சீனாவில் பதிவான 3,316 ஐ விட அதிகமாக உள்ளது, கொரோனா பாதிப்புக்கு அமெரிக்காவில் 1 லட்சம் முதல் 2,40,000 பேர்கள் வரை பலியாகும் அபாயம் இருக்கிறது என மதிப்பிடப்பட்டு உள்ளது.

இன்றைய நிலவரப்படி, உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகளின் எண்ணிக்கையின்படி கொரோனா  வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதில் அமெரிக்கா கடைசி இடத்தில் உள்ளது. ஜான்ஸ் ஹாப்கின்ஸ் கொரோனா வைரஸ் வள மையத்தின் தகவல் படி அமெரிக்காவில் உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகளின் எண்ணிக்கை நேற்று உலகின் வேறு எந்த நாட்டையும் விட வேகமாக உயர்ந்து உள்ளது. 

உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்புகளின் எண்ணிக்கை புதன்கிழமை 7,783 லிருந்து 13,677 ஆக உயர்ந்தது. ஒரு நாளில் 5,894 புதிய உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகளின் வளர்ச்சி 24 மணி நேர காலப்பகுதியில் 76 சதவீத பாதிப்புகள் அதிகமாகும்.

இதே காலகட்டத்தில் மற்ற நாடுகளில் அதிகரித்துள்ள சதவீதம் வருமாறு:

அமெரிக்க- பாதிப்புகள் 5,894 அதிகரித்து 76% சதவீதமாக உள்ளது
இத்தாலி-பாதிப்புகள் 5,322 அதிகரித்து 15% சதவீதமாக உள்ளது
ஸ்பெயின்-பாதிப்புகள் 4,053 அதிகரித்து 29% சதவீதமாக உள்ளது
ஜெர்மனி-பாதிப்புகள் 2,993 அதிகரித்து 24% சதவீதமாக உள்ளது
பிரான்ஸ்-பாதிப்புகள் 1,828 ஆக அதிகரித்து 20% சதவீதமாக உள்ளது
சுவிட்சர்லாந்து-பாதிப்புகள் 1,047 அதிகரித்து 35% சதவீதமாக உள்ளது
ஈரான்-பாதிப்புகள் 1,046 அதிகரித்து 6% சதவீதமாக உள்ளது
நெதர்லாந்து-பாதிப்புகள் 409 அதிகரித்து 20% சதவீதமாக உள்ளது
ஆஸ்திரியா-பாதிப்புகள் 367 அதிகரித்து 22% சதவீதமாக உள்ளது
போர்ச்சுகல்-பாதிப்புகள் 337 அதிகரித்து 75% சதவீதமாக உள்ளது
பெல்ஜியம்-பாதிப்புகள் 309 அதிகரித்து 21% சதவீதமாக உள்ளது
அயர்லாந்து-பாதிப்புகள் 265 ஆக அதிகரித்து 91% சதவீதமாக உள்ளது
பிரேசில்-பாதிப்புகள் 249 அதிகரித்து 67% சதவீதமாக உள்ளது
இஸ்ரேல்-பாதிப்புகள் 244 அதிகரித்து 56% சதவீதமாக உள்ளது
செசியா-பாதிப்புகள் 230 அதிகரித்து 50% சதவீதமாக உள்ளது
நார்வே-பாதிப்புகள் 196 ஆக அதிகரித்து 13% சதவீதமாக உள்ளது
ஸ்வீடன்-பாதிப்புகள் 160 அதிகரித்து 13% சதவீதமாக உள்ளது
பாகிஸ்தான்-பாதிப்புகள் 155 ஆக அதிகரித்து 52% சதவீதமாக உள்ளது
தென் கொரியா-பாதிப்புகள் 152 ஆக அதிகரித்து 2% சதவீதமாக உள்ளது
கனடா-பாதிப்புகள் 143 அதிகரித்து 22% சதவீதமாக உள்ளது
லக்சம்பர்க்-பாதிப்புகள் 132 அதிகரித்து 65% சதவீதமாக உள்ளது
ஆஸ்திரேலியா-பாதிப்புகள் 113 அதிகரித்து 20% சதவீதமாக உள்ளது
மலேசியா-பாதிப்புகள் 110 அதிகரித்து 14% சதவீதமாக உள்ளது
போலந்து-பாதிப்புகள் 104 அதிகரித்து 41% சதவீதமாக உள்ளது
சவுதி அரேபியா-பாதிப்புகள் 103 அதிகரித்து 60% சதவீதமாக உள்ளது
துருக்கி-பாதிப்புகள் 94 ஆக அதிகரித்து 96% சதவீதமாக உள்ளது
டென்மார்க்-பாதிப்புகள் 94 ஆக அதிகரித்து 9% சதவீதமாக உள்ளது
பெரு பாதிப்புகள் 89 ஆக அதிகரித்து 61% சதவீதமாக உள்ளது
ஈக்வடார்-பாதிப்புகள் 88 ஆக அதிகரித்து 79% சதவீதமாக உள்ளது
இந்தோனேசியா-பாதிப்புகள் 84 ஆக அதிகரித்து 37% சதவீதமாக உள்ளது
ஐஸ்லாந்து-பாதிப்புகள் 80 அதிகரித்து 32% சதவீதமாக உள்ளது
பின்லாந்து-பாதிப்புகள் 64 அதிகரித்து 19% சதவீதமாக உள்ளது
இங்கிலாந்து-பாதிப்புகள்  63 அதிகரித்து 2% சதவீதமாக உள்ளது
எகிப்து-பாதிப்புகள் 60 அதிகரித்து 31% சதவீதமாக உள்ளது
தாய்லாந்து-பாதிப்புகள் 60 அதிகரினத்து 28% சதவீதமாக உள்ளது
சீனா-பாதிப்புகள் 54 அதிகரித்து(வெளிநாட்டினர்) 0% சதவீதமாக உள்ளது
ரஷ்யா-பாதிப்புகள் 52 அதிகரித்து 35% சதவீதமாக உள்ளது
இந்தியா-பாதிப்புகள் 38 ஆக அதிகரித்து 24% சதவீதமாக உள்ளது
ஜப்பான் பாதிப்புகள் 35 ஆக அதிகரித்து 4% சதவீதமாக உள்ளது
தென்னாப்பிரிக்கா-பாதிப்புகள் 34 ஆக அதிகரித்து 29% சதவீதமாக உள்ளது
சிங்கப்பூர்-பாதிப்புகள் 32 அதிகரித்து 10% சதவீதமாக உள்ளது
ஆர்மீனியா-பாதிப்புகள் 31 ஆக அதிகரித்து 37% சதவீதமாக உள்ளது
ஈராக்-பாதிப்புகள் 28 அதிகரித்து 17% சதவீதமாக உள்ளது
ஐக்கிய அரபு எமிரேட்ஸ்-பாதிப்புகள் 27 அதிகரித்து 24% சதவீதமாக உள்ளது
மெக்சிகோ-பாதிப்புகள் 25 அதிகரித்து 27% சதவீதமாக உள்ளது
குரோசியா-பாதிப்புகள் 24% அதிகரித்து 30% வளர்ச்சியை சமன் செய்கின்றன
லெபனான்-பாதிப்புகள் 24 அதிகரித்து 18% சதவீதமாக உள்ளது
பனாமா-பாதிப்புகள் 23 ஆக அதிகரித்து 27% சதவீதமாக உள்ளது
பஹ்ரைன்-பாதிப்புகள் 22 ஆக அதிகரித்து 9% சதவீதமாக உள்ளது