விசா காலம் முடிந்தும் குவைத் நாட்டில் தங்கி இருப்பவர்களுக்கு பொது மன்னிப்பு


விசா காலம் முடிந்தும் குவைத் நாட்டில் தங்கி இருப்பவர்களுக்கு பொது மன்னிப்பு
x
தினத்தந்தி 4 April 2020 9:30 AM GMT (Updated: 4 April 2020 9:30 AM GMT)

விசா காலம் முடிந்தும் குவைத் நாட்டில் தங்கி இருப்பவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டு உள்ளது.

குவைத்

கொரோனா அச்சம் காரணமாக விசா காலம் முடிந்தும், ஏராளமான தொழிலாளர்கள் குவைத் நாட்டில் தங்கி தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், அவர்கள் அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்க அந்நாட்டு மன்னர் சபா-அல்-அகமது முடிவு செய்துள்ளார்.

இந்த நிலையில் குவைத் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதியில் இருந்து 30-ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் விசா முடிந்த பின்னரும் குவைத்தில் தங்கி இருப்பவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது

இதுமட்டுமின்றி அரசே அவர்களுக்கு  விமான டிக்கெட் எடுத்து அவரவர் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பாஸ்போர்ட் இல்லாதவர்கள் அவர்களது நாடுகளின் தூதர்களை அணுகலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story