உலக செய்திகள்

உலகம் முழுவதும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 12.14 லட்சம் ஆக உயர்வு + "||" + Worldwide, the number of people affected by coronation increased to 12.14 lakh

உலகம் முழுவதும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 12.14 லட்சம் ஆக உயர்வு

உலகம் முழுவதும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 12.14 லட்சம் ஆக உயர்வு
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 65 ஆயிரத்து 605 ஆக உயர்ந்து உள்ளது.
புதுடெல்லி,

சீனாவில் இருந்து 199க்கும் மேற்பட்ட உலக நாடுகளுக்கு பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 65 ஆயிரத்து 605 ஆக உயர்ந்து உள்ளது.  கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 12 லட்சத்து 14 ஆயிரத்து 487 ஆக உயர்ந்து உள்ளது.  இதுவரை 2 லட்சத்து 53 ஆயிரத்து 626 பேர் சிகிச்சை முடிந்து திரும்பியுள்ளனர்.  8 லட்சத்து 95 ஆயிரத்து 256 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களில் லேசான பாதிப்புடன் 8 லட்சத்து 50 ஆயிரத்து 618 பேரும் (95 சதவீதம்), தீவிர பாதிப்பில் 44 ஆயிரத்து 638 பேரும் (5 சதவீதம்) உள்ளனர்.

அமெரிக்காவில் அதிக அளவாக 3 லட்சத்து 11 ஆயிரத்து 637 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  ஸ்பெயின் (1,30,759) 2வது இடத்திலும், இத்தாலி (1,24,632) 3வது இடத்திலும், ஜெர்மனி (96,092) 4வது இடத்திலும், பிரான்ஸ் (89,953) 5வது இடத்திலும் உள்ளன.

இதேபோன்று பலி எண்ணிக்கையில் இத்தாலி அதிக அளவாக 15 ஆயிரத்து 362 பேருடன் முதல் இடத்தில் உள்ளது.  ஸ்பெயின் (12,418) 2வது இடத்திலும், அமெரிக்கா (8,454) 3வது இடத்திலும், பிரான்ஸ் (7,560) 4வது இடத்திலும், இங்கிலாந்து (4,313) 5வது இடத்திலும், ஈரான் (3,603) 6வது இடத்திலும் உள்ளன.

சீனாவில் 81,669 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.  பலி எண்ணிக்கை 3,329 ஆக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் கொரோனா பாதிப்பு; கடந்த 24 மணிநேரத்தில் 146 பேர் பலி
இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு கடந்த 24 மணிநேரத்தில் 146 பேர் பலியாகி உள்ளனர்.
2. இந்தியாவில் கொரோனா பாதிப்பு; பலி எண்ணிக்கை 4,021 ஆக உயர்வு
இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 4,021 ஆக இன்று உயர்வடைந்து உள்ளது.
3. இந்தியாவில் கொரோனா பாதிப்பு; பலி எண்ணிக்கை 3,867 ஆக உயர்வு
இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 3,867 ஆக இன்று உயர்வடைந்து உள்ளது.
4. கொரோனா பாதிப்பு; தமிழகத்தில் பெண்களுடன் ஒப்பிடுகையில் ஆண்கள் எண்ணிக்கை இரு மடங்காக உயர்வு
தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் பெண்களுடன் ஒப்பிடுகையில் ஆண்கள் எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்துள்ளது.
5. சென்னையில் கொரோனாவுக்கு பாதிப்பு எண்ணிக்கை 9,989 ஆக உயர்வு
சென்னையில் கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை 72 ஆக உயர்ந்து உள்ளது.