குறைந்த அபாய பகுதியாக உகான் நகரம் அறிவிப்பு


குறைந்த அபாய பகுதியாக உகான் நகரம் அறிவிப்பு
x
தினத்தந்தி 6 April 2020 1:14 AM GMT (Updated: 6 April 2020 1:14 AM GMT)

கொரோனா வைரஸ் முதன் முதலில் வெளிப்பட்ட உகான் நகரம் குறைந்த அபாய பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பீஜிங், 

சீனாவில் ஹுபெய் மாகாணம் உகான் நகரில்தான், உலகில் முதன்முதலாக கொரோனா வைரஸ் தோன்றியது. அங்கு தற்போது வைரசின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த 14 நாட்களில் புதிதாக கொரோனா வைரஸ் தாக்காத பகுதிகள், குறைந்த அபாயம் கொண்ட பகுதிகளாகவும், 50 பேருக்கு குறைவாக தாக்கிய பகுதிகள் ‘நடுத்தர அபாய பகுதி’களாகவும், 50 பேருக்கு மேல் தாக்கிய பகுதிகள், ‘அதிக அபாய பகுதி’களாகவும் அறிவிக்கப்பட்டு வருகின்றன. 

உகான் நகரில் மொத்தம் உள்ள 13 நிர்வாக பகுதிகளில், 9 பகுதிகள் ‘குறைந்த அபாயம் கொண்ட பகுதி’களாக நேற்று அறிவிக்கப்பட்டன. இதனால் அங்கு இயல்புநிலை திரும்பி வருவது தெளிவாகிறது. அதே சமயத்தில், நாடு முழுவதும் 30 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இவர்களில் 5 பேர் உள்நாட்டினர். 3 பேர் இறந்துள்ளனர். கொரோனா அறிகுறிகளே இல்லாமல், மேலும் 47 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.


Next Story