உலக செய்திகள்

அமெரிக்காவில் புலிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு + "||" + Tiger at US zoo tests positive for coronavirus

அமெரிக்காவில் புலிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு

அமெரிக்காவில் புலிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு
அமெரிக்காவின் நியூயார்க்சிட்டியில் உள்ள வன உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் புலிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நியூயார்க்,

உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டி படைத்து வருகிறது. வல்லரசு நாடான அமெரிக்காவில் தான் கொரோனா தற்போது அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் சுமார்  336,673 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் 1,272,860- பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 69,424- பேர் கொரோன பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். 

மனித சமூகத்தை மிரட்டி வரும் கொரோனா வைரஸ், விலங்குகளைப் பாதிக்காது என்று பரவலாக பேசப்பட்டு வந்தன.  ஆனால், இந்தக்கூற்றைப் பொய்யாக்கும் வகையில், அமெரிக்காவின் நியூயார்க்சிட்டியில் அமைந்துள்ள புரேன்ஸ் உயிரியல் பூங்காவில் பரமாரிக்கப்பட்டு  வரும் பெண் புலி ஒன்றுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

உயிரியல் பூங்காவில் பணியாற்றி வந்த நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. எனவே, அந்த நபர் மூலமாக புலிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.  மேலும், சில புலிகளுக்கு வறட்டு இருமல் போன்ற அறிகுறிகள் தென்படுவதாக உயிரியல் பூங்கா நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.   புலிகள் மற்றும் சிங்கங்களிடம் வைரஸ் எவ்வாறு இருக்கும் என்று தெரியவில்லை. எனினும், பூங்காவில் உள்ள அனைத்து விலங்குகளையும் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம் என்று பூங்கா நிர்வாகம் கூறியுள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்காவில் புதிதாக 20,634 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
அமெரிக்காவில் ஒரே நாளில் புதிதாக 20,634 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. "எங்கள் போர்க்கப்பல்களில் இருந்து 100 மீட்டர் தொலைவில் இருங்கள்" ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
அமெரிக்கா தனது போர்க்கப்பல்களில் இருந்து 100 மீட்டர் தொலைவில் இருக்குமாறு ஈரானுக்கு எசரிக்கை விடுத்து உள்ளது.இதனால் போர்ப்பதற்றம் ஏற்பட்டு உள்ளது.
3. அமெரிக்காவில் சாலையில் கிடந்த ரூ.7½ கோடியை போலீசில் ஒப்படைத்த தம்பதி: பாராட்டுகள் குவிகிறது
அமெரிக்காவில் சாலையில் கிடந்த ரூ.7½ கோடியை போலீசில் ஒப்படைத்த தம்பதிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
4. அமெரிக்காவில் அகதிகள் தடுப்பு முகாமில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,145 ஆக அதிகரிப்பு
அமெரிக்காவில் அகதிகள் தடுப்பு முகாமில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,145 ஆக அதிகரித்துள்ளது.
5. கொரோனா பாதிப்பு- அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,500 பேர் பலி
கொரோனா பாதிப்பு காரணமாக அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,500 பேர் பலியாகியுள்ளனர்.