உலக அளவில் கொரோனா பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 69 ஆயிரத்தை தாண்டியது


உலக அளவில் கொரோனா பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 69 ஆயிரத்தை தாண்டியது
x
தினத்தந்தி 6 April 2020 1:45 AM GMT (Updated: 6 April 2020 1:45 AM GMT)

உலகளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 69 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

ஜெனீவா,

சீனாவில் உருவாகி மற்ற நாடுகளுக்கு பரவிய கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைக்கிறது. கொரோனாவுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்காததால், அது மக்களுக்கு பரவுவதை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒவ்வொரு நாடும் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இந்தியாவிலும் 21 நாள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

என்னதான் நடவடிக்கை எடுத்தாலும் நோய்க்கிருமி பரவுவதை முழுமையாக கட்டுப்படுத்த முடியாததால் செய்வது அறியாமல் உலக நாடுகள் திகைத்து நிற்கின்றன. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உலக அளவில் 13 லட்சத்தை  நெருங்குகிறது.இதேபோல் பலியானவர்களின் எண்ணிக்கை 69 ஆயிரத்தை கடந்தது.

அமெரிக்காவில் மட்டும் 3.36 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  9,616  பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். ஸ்பெயினில் 131,168 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஸ்பெயினில் கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்பு 12,641 ஆக உள்ளது.  இத்தாலியில்  128,948 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இத்தாலியில் 15,887- பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

Next Story