உலக செய்திகள்

ஊரடங்கின் போது சத்தமாக பேசிய 5 பேர் சுட்டுக்கொலை + "||" + Five shot dead in Russia for 'talking loudly'

ஊரடங்கின் போது சத்தமாக பேசிய 5 பேர் சுட்டுக்கொலை

ஊரடங்கின் போது சத்தமாக பேசிய 5 பேர் சுட்டுக்கொலை
ரஷ்யாவில் ஊரடங்கு சட்டம் அமலில் உள்ள போது தன் வீட்டு வாசலில் சத்தமாக பேசிய 5 பேரை ரஷ்யர் ஒருவர் சுட்டுக் கொலைசெய்து உள்ளார்.
மாஸ்கோ

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். 

ரஷ்யாவிலும் ஊரடங்கு சிலபகுதிகளில் அறிவிக்கப்பட்டு உள்ளது.  மாஸ்கோவிலிருந்து தென்கிழக்கில் 200 கி.மீ தொலைவில் உள்ள ரியாசான் பிராந்தியத்தில் உள்ள யெலட்மா கிராமத்தில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

யெலட்மா கிராமத்தில் சனிக்கிழமை இரவு நேரத்தில் 31வயது நபர் ஒருவரின் வீட்டு ஜன்னலுக்கு வெளியே இளம் வயது ஆண்களும் பெண்களும் கூட்டமாக நின்று சந்தமாக பேசிக்கொண்டிருந்துள்ளனர். இதனால், ஆத்திரம் அடைந்த 31வயது நபர், அவர்களிடம் சென்று அங்கிருந்து போகும்படி கூறியுள்ளார்.

இதனால், வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கோபத்தின் உச்சிக்கு சென்ற அந்த நபர், தன்னிடம் இருந்த கைதுப்பாக்கியை எடுத்து சரமாரியாக சுட்டுள்ளார். இதில், 4 ஆண்கள் ஒரு பெண் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக யாசான் போலீசார்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. ஊரடங்கு உத்தரவு காரணமாக வீடுகளில் திருட முடியாததால் நகை கடையில் கொள்ளையடித்தேன் கைதான ஆசாமி போலீசில் பரபரப்பு வாக்குமூலம்
ஊரடங்கு உத்தரவு காரணமாக வீடுகளில் திருட முடியாததால் நகை கடையில் கொள்ளையடித்தேன் என்று நகைக்கடை கொள்ளை வழக்கில் கைதான ஆசாமி போலீசில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
2. ரஷ்யாவில் உச்சம் தொட்ட கொரோனா ஒரே நாளில் 136 இறப்புகள், 8,764 புதிய பாதிப்புகள்
ரஷ்யா கடந்த 24 மணி நேரத்தில் 136 இறப்புகள், 8,764 புதிய கொரோனா பாதிப்புகளை பதிவு செய்து உள்ளது.
3. கொரோனா பாதிப்புகள்: ரஷ்யா தனது இறப்பு விகிதத்தை குறைத்து காட்டுவதாக குற்றச்சாட்டு
கொரோனா பாதிப்புகள் தொடர்பாக, ரஷ்யா தனது இறப்பு விகிதத்தை குறைத்து காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
4. கொரோனா பாதிப்பில் இத்தாலி, இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளியது ரஷியா
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் 5-வது இடத்தில் இருந்த ரஷியா, நேற்று இத்தாலி மற்றும் இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி 3-வது இடத்துக்கு நகர்ந்தது.
5. பாதுகாப்பில்லாத கொரோனா பணி: மருத்துவமனை ஜன்னலில் இருந்து குதித்த 3 டாக்டர்கள்
ரஷ்யாவில் கொரோனா நிலைமை மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், டாக்டர்களுக்கே பாதுகாப்பு இல்லை எனவும் எச்சரித்து மூன்று டாக்டர்கள் மருத்துவமனை ஜன்னலில் இருந்து குதித்துள்ளனர்.