உலக செய்திகள்

கொரோனா பாதிப்பு; அமெரிக்காவில் இரண்டாவது நாளாக சுமார் 2 ஆயிரம் பேர் பலி + "||" + U.S. coronavirus death toll passes 14,600

கொரோனா பாதிப்பு; அமெரிக்காவில் இரண்டாவது நாளாக சுமார் 2 ஆயிரம் பேர் பலி

கொரோனா பாதிப்பு; அமெரிக்காவில் இரண்டாவது  நாளாக  சுமார் 2 ஆயிரம் பேர் பலி
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அமெரிக்காவில் 2-வது நாளாக சுமார் 2 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர்.
வாஷிங்டன்,

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகளை  உலுக்கி வருகிறது.  வல்லரசு நாடான அமெரிக்காவில் கொரோனா வைரஸ் கோர தாண்டவம் ஆடுகிறது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனாவால்  31 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

நேற்று ஒரே நாளில் மட்டும்  1,940- பேர் கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்தனர்.  அமெரிக்காவில் கொரோனாவுக்கு ஒரு நாளில் ஏற்படும் உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ந்து 2-வது நாளாக  2 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.  அமெரிக்காவில் ஒட்டு மொத்தமாக ஏற்பட்ட பலி எண்ணிக்கை 14,788 ஆக உள்ளது. தற்போதைய நிலவரப்படி அமெரிக்காவில் கொரோனாவால் 434,927- பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  அதேபோல், சுமார் 23 ஆயிரம் பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா சிகிச்சை : இந்தியாவிடம் உதவியை எதிர்பார்க்கும் பிரான்ஸ்
கொரோனா பரிசோதனை, சிகிச்சை மற்றும் தடுப்பு மருந்து கிடைப்பதில், இந்தியாவின் ஒத்துழைப்பை பிரான்ஸ் எதிர்பார்ப்பதாக அந்நாட்டின் இமானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.
2. சென்னையில் இருந்து பர்கூர் வந்த தனியார் நிறுவன ஊழியருக்கு கொரோனா
சென்னையில் இருந்து பர்கூருக்கு வந்த தனியார் நிறுவன ஊழியருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது குடும்பத்தை சேர்ந்த மேலும் 3 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
3. கொரோனா பாதித்த பகுதியில் நாராயணசாமி ஆய்வு
கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
4. 500 பேர் கொரோனாவால் பாதிக்கப்படும் அபாயம் ; அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் எச்சரிக்கை
புதுவை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
5. தென்திருப்பேரையில் கொரோனா பாதிப்பு: சுகாதார பணிகளை கலெக்டர் ஆய்வு
தென்திருப்பேரையில் கொரோனா கட்டுப்பாட்டு மண்டலத்தில் சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த பணிகளை கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆய்வு செய்தார்.