உலக செய்திகள்

சீனாவிலும் கொரோனா 2-வது அலை வீசக்கூடிய ஆபத்து உள்ளது அதிபர் ஜி ஜின்பிங் கவலை + "||" + China's Xi warns of "new difficulties and challenges" amid rising risk of a second wave

சீனாவிலும் கொரோனா 2-வது அலை வீசக்கூடிய ஆபத்து உள்ளது அதிபர் ஜி ஜின்பிங் கவலை

சீனாவிலும் கொரோனா 2-வது அலை வீசக்கூடிய ஆபத்து உள்ளது அதிபர் ஜி ஜின்பிங் கவலை
சீனாவிலும் அதன் இரண்டாவது அலை வீசக்கூடிய ஆபத்து இருப்பதாக அதிபர் ஜி ஜின்பிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பெய்ஜிங்

சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ்  தற்போது, அமெரிக்காவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக உலகம் முழுவதும், 14 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 88 ஆயிரம் பேர் வரையில் உயிரிழந்துள்ளனர். நேற்று முன்தினம் கொரோனாவால் எந்த மரணமும் நிகழவில்லை என நேற்று அரசு தகவல் வெளியிட்டது.இந்நிலையில், கொரோனா வைரஸ்  உருவெடுத்த சீனாவின் உகான் நகரம் சுமார் 11 வாரங்களின் பின்னர் நேற்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகள் முழுவதும் கொரோனா கோரதாண்டவமாடி வருகிறது.சீனாவிலும் அதன் இரண்டாவது அலை வீசக்கூடிய ஆபத்து இருப்பதாக அதிபர் ஜி ஜின்பிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சீனாவின் அதிகாரமிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ நிலைக்குழுவில் பேசிய அவர், வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்பும் சீனர்கள் வாயிலாக, நாட்டில் மீண்டும் ஒரு கொரோனா அலை வீசக்கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாக அரசு செய்தி நிறுவனமான ஷின்ஹுவா தெரிவித்துள்ளது.

கொரோனாவின் பாதிப்பில் இருந்து சீனாவின் பொருளாதார, சமூக வளர்ச்சி மீண்டு வரும் நிலையில், அவற்றை தடுக்கும் புதிய சவால்களும், சிக்கல்களும் உருவாகிறது என ஜி ஜின்பிங் கவலை தெரிவித்ததாகவும் அது தெரிவித்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. லடாக்கில் நீடிக்கும் பதற்றம்... எல்லையில் ஆயுதங்களை குவிக்கும் இருநாட்டு படைகள்!
லடாக் எல்லை பிரச்சினையில் பதற்றம் இன்னும் தணியாத சூழலில், இந்தியாவும், சீனாவும் ஏராளமான ஆயுதங்களை எல்லையில் குவிக்கத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
2. 30 லட்சம் ஹாங்காங் குடிமக்களுக்கு குடியுரிமை வழங்க இங்கிலாந்து திட்டம் ; சீனா கோபம்
ஹாங்காகங்கில் உள்ள 30 லட்சம் குடிமக்களுக்கு இங்கிலாந்து குடியுரிமை வழங்க இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் முடிவுசெய்துள்ளது. இதனால் சீனா கோபம் கொண்டுள்ளது.
3. டொனால்டு டிரம்ப் பிரதமர் மோடி இடையே சமீபத்தில் எந்த உரையாடலும் நடைபெறவில்லை -தகவல்கள்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பிரதமர் மோடி இடையே சமீபத்தில் எந்த உரையாடலும் நடைபெறவில்லை என வெளியுறவுத்துறை அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவித்து உள்ளது.
4. உலகில் கொரோனா பாதிப்பு தரவரிசையில் இந்தியாவுக்கு 9-வது இடம்; மரணங்களில் சீனாவை முந்தியது
உலகில் கொரோனா வைரஸ் பாதிப்பு தரவரிசையில் இந்தியா 9-வது இடத்தில் உள்ளது, இறப்பு எண்ணிக்கையில் சீனாவை முந்தி உள்ளது.
5. "இந்தியாவை தட்டி கேட்க வேண்டிய நேரம் வந்துவிட்டது" சீனாவுக்கு ஆதரவாக பாகிஸ்தான் கருத்து
இந்தியாவிற்கும், சீனாவிற்கு இடையே நடக்கும் மோதலால் பெரிய ஆபத்து வரப் போவதாக பாகிஸ்தான் முதல் முறையாக கருத்து தெரிவித்துள்ளது.