சீனாவில் புதிதாக 46 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு


சீனாவில் புதிதாக 46 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு
x
தினத்தந்தி 12 April 2020 3:01 AM GMT (Updated: 12 April 2020 3:01 AM GMT)

சீனாவில் புதிதாக 46 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

பீஜிங்,

கொரோனா வைரஸ் சீனாவின் உகான் நகரில் தோன்றி உலகமெங்கும் பரவி வருகிறது. அங்கு இந்த வைரஸ் நோய் கட்டுக்குள் வந்து இருந்தது.

இந்த நிலையில் இப்போது மீண்டும் புதிதாக அங்கு இந்த வைரஸ் தொற்றுநோய் பரவத்தொடங்கி இருக்கிறது. நேற்று ஒரே நாளில் புதிதாக 46 பேருக்கு கொரோனா வைரஸ் நோய் தாக்கி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் 34 பேருக்கு எந்தவித அறிகுறியும் இல்லாமல் கொரோனா வைரஸ் பாதித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த வைரசுக்கு, ஹூபெய் மாகாணத்தில் நேற்று 3 பேர் பலியாகினர். இதனால் அங்கு கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 3,339 ஆக உயர்ந்துள்ளது.

அந்த நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளானோரின் மொத்த எண்ணிக்கை 81 ஆயிரத்து 900-ஐ கடந்து சென்று கொண்டிருப்பதாகவும், 1,089 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளதாகவும், 77 ஆயிரத்து 525 பேர் சிகிச்சைக்கு பின்னர் வீடுகளுக்கு திரும்பி உள்ளதாகவும் சீன தேசிய சுகாதார கமிஷன் தெரிவித்துள்ளது.

Next Story