உலக செய்திகள்

இந்தோனேசியாவில் பேய் வேடத்தில் உலாவும் போலீசார் - ஊரடங்கை கடைப்பிடிக்க நூதன நடவடிக்கை + "||" + Police in Indonesia haunted police - new action for curfew

இந்தோனேசியாவில் பேய் வேடத்தில் உலாவும் போலீசார் - ஊரடங்கை கடைப்பிடிக்க நூதன நடவடிக்கை

இந்தோனேசியாவில் பேய் வேடத்தில் உலாவும் போலீசார் - ஊரடங்கை கடைப்பிடிக்க நூதன நடவடிக்கை
இந்தோனேசியாவில் ஊரடங்கை கடைப்பிடிக்க பேய் வேடத்தில் உலாவி வருகின்றனர்.
ஜகார்த்தா, 

கொரோனா என்ற உயிர்க்கொல்லி வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த கொடிய வைரசை அழிக்க இதுவரை தடுப்பு மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், தனிமைப்படுத்தல் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதன் மூலம் மட்டுமே வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியும் என்கிற நிலை உள்ளது.

இதனால் கொரோனா பாதிப்பை எதிர்கொண்டு வரும் பெரும்பாலான நாடுகள் தேசிய அளவில் ஊரடங்கை அமல்படுத்தி, மக் களை வீடுகளுக்குள்ளேயே இருக்க அறிவுறுத்தி வருகின்றன. ஆனாலும் ஒரு சில நாடுகளில் மக்கள் ஊரடங்கை உதாசீனப்படுத்தி வழக்கம்போல் வீதிகளில் நடமாடி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்தோனேசியா நாட்டின் ஜாவா தீவில் உள்ள கெபு என்ற கிராமத்தில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதை தடுக்க ஒரு நூதன நடவடிக்கை கடைப் பிடிக்கப்பட்டு வருகிறது. அது என்னவென்றால் மக்களை பயமுறுத்தி வீடுகளுக்குள்ளேயே இருக்க செய்யும் விதமாக, இரவு நேரத்தில் மனிதர் களுக்கு பேய் வேடமிட்டு சாலைகளில் உலாவவிட்டுள்ளார் அந்த கிராமத்தின் தலைவர்.

இதுபற்றி அவர் கூறுகையில், “நாங்கள் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற் காகவே இந்த தடுப்பு நடவடிக்கைகளை ஏற்படுத்தினோம். இது நல்ல பலனளித்துள் ளது. ஆரம்பத்தில் நாங்கள் இதை தனியாக செய்துவந்தோம். தற்போது எங்களுடன் போலீசாரும் கைக்கோர்த்துள்ளனர்” என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தோனேசியாவில் படகு கவிழ்ந்தது; 10 பேர் மாயம்
இந்தோனேசியாவில் படகு கவிழ்ந்ததில் 10 பேர் மாயமாகினர்.
2. கொரோனா வைரஸ் உங்கள் மனைவி போன்றது மந்திரி பேச்சு-பெண்கள் அமைப்புகள் கண்டனம்
கொரோனா வைரஸ் உங்கள் மனைவி போன்றது என்ற இந்தோனேசிய மந்திரியின் பேச்சுக்கு பெண்கள் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
3. இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.3 புள்ளிகளாக பதிவு
இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் சவும்லாகி நகரில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
4. இந்தோனேசியாவில் பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்களுக்கு நூதன தண்டனை
இந்தோனேசியாவில் பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்களுக்கு நூதன தண்டனை வழங்கப்படுகிறது.
5. இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்; பீதியடைந்த மக்கள் வீதிகளில் தஞ்சம்
இந்தோனேசியாவில் 7.3 ரிக்டர் அளவுள்ள பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் வீதிகளில் தஞ்சமடைந்தனர்.