காஷ்மீரில் தாக்குதல் நடத்த தலிபான்களிடம் பயிற்சி பெறும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள்


படம் :Hindustan Times
x
படம் :Hindustan Times
தினத்தந்தி 16 April 2020 12:47 PM GMT (Updated: 16 April 2020 12:47 PM GMT)

காஷ்மீரில் தாக்குதல் நடத்த தலிபான்களிடம் பயிற்சி பெறும் 10 ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானில் சுட்டுக்கொலை

காபூல்

ஆப்கானிஸ்தான் படைகள் நங்கர்ஹரின் முஹ்மத் தாராவில் தலிபான் முகாம் இருப்பதாக என்று கருதப்பட்ட இடத்தில் ஒரு சோதனையை நடத்தினர். அப்போது இருதரப்புக்கும் இடையே  துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் 15 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 4 ஆப்கானிஸ்தான் படை வீரர்கள் பலியானார்கள்.

கொல்லப்பட்ட 15 பயங்கரவாதிகளில் 5 பேர் மட்டுமே ஆப்கானிஸ்தான் தலிபானைச் சேர்ந்தவர்கள் என்று பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்தனர். மற்றவர்கள் ஜம்மு-காஷ்மீரில் தாக்குதல் நடத்த பயிற்சி பெற்ற ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் ஆவார்கள்.

இந்துஸ்தான் டைம்ஸ் இந்த மோதலின் புகைப்படங்களையும் வீடியோ காட்சிகளையும் வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படங்களில் ஒன்று, முகாமில் இருந்து ஆப்கானிய பாதுகாப்பு படையினரால் கைப்பற்றப்பட்ட சில ஆயுதங்களைக் காட்டுகிறது: 2 மோட்டார் ஏவுகணைகள்,  ராக்கெட் மூலம் இயக்கப்படும் எறிகுண்டுகள் மற்றும் 2 இயந்திர துப்பாக்கிகள் உள்ளன.

Next Story